Sanskathi
Feb 12

நாட்டைத் துண்டாட தமிழர்கள் முயற்சிக்கின்றனர்; பெளத்த பிக்கு சீற்றம்

நாட்டைத் துண்டாட தமிழர்கள் முயற்சிக்கின்றனர்; பெளத்த பிக்கு சீற்றம்

போர் முடிந்த பின்னர் நாட்டைத் துண்டு துண் டாக்க புலம்பெயர்ந்து வாழும், தமிழர்கள் முயற்சிக்கின்றனர் என்று தேசிய பிக்கு சம்மேளனத்தின் தலைவர் லியன்வல சாசரதன தேரர் தெரிவித்துள்ளார்.

ஞானசார தேரரை விடுதலை செய்யக் கோரி, பொதுமக்களிடம் கையயழுத்துப் பெறும் நடவடிக்கை கண்டியில் நேற்று முன் தினம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே, அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்-

புலம் பெயர்ந்து வாழும், தமிழர் ளின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில், சில அரசியல் தலைவர்கள் செயற்படுகின்றனர். அதற்கு நாம் ஒருபோதும் இடம் கொடுக்கப் போவதில்லை. நாட்டில் யுத்தம் நிறைவடைந்தாலும் நாட்டை விழுங்குவதற்கு தமிழ் டயஸ்போரா காத்திருக்கிறது.

நாங்கள் புத்த பிக்குகள் என்ற வகையில் சகல சவால்களையும் எதிர்கொள்ளத் தயாராகவே வீதியில் இறங்கியுள்ளதை தமிழ் மற் றும் புலம்பெயர் தேசங்களிலுள்ள ஏனைய டயஸ்போராக்களும் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்த நாட்டைச் சமஷ்டி முறை யாக மாற்றி ஒவ்வொருவருக்கும் ஏற்ற வகையில் துண்டு துண்டாக்க விடமாட்டோம். இதற்கு எதிராக குரல் கொடுத் துச் சிறையில் இருக்கும் எங்கள் தலைவர் ஞானசார தேரரைச் சிறையிலிருந்து மீட்க நாம் போராடுகிறோம். அதற்கு ஒத்துழைப்பு கொடுத்து புண்ணியம் தேடிக்கொள்ளுங்கள்” என்றார்.

மாவீரர்கள்