Sanskathi
Feb 18

18வது திருத்தத்தை மீளக்கொண்டுவரும் முயற்சிக்கு வலுக்கும் எதிர்ப்புக்கள்.!

18வது திருத்தத்தை மீளக்கொண்டுவரும் முயற்சிக்கு வலுக்கும் எதிர்ப்புக்கள்.!

அரசியலமைப்பின் 18 ஆவது திருத்தச்சட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்தும், எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவின் திட்டத்துக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒத்துழைத்து வருகிறார் என சிவில் சமூக அமைப்புகள் குற்றம்சாட்டியுள்ளன.

2015 ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவின் வெற்றிக்காக,பாடுபட்ட சிவில் சமூக அமைப்புகளின் ஒன்றியமான புரவெசி பலயவின், அமைப்பாளர் காமினி வியன்கொட இதுதொடர்பாக கருத்து வெளியிடுகையில்,

2010 செப்டெம்பரில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 18 ஆவது திருத்தச்சட்டத்தை 2015 ஏப்ரல் மாதம் நாடாளுமன்றத்தில் 19 ஆவது திருத்தச்சட்டம் நிறைவேற்றப்பட்டதன் மூலம் இல்லாமல் ஒழிக்கப்பட்டது.

19 ஆவது திருத்தச்சட்டத்தின் மூலம் நிறைவேற்று அதிகாரம் குறைக்கப்பட்டது, அதனை மீண்டும் நடைமுறைக்குக் கொண்டு வருவதற்கு ஜனாதிபதி இடமளிக்கக் கூடாது.

தற்போதைய நிலையில் 18 ஆவது திருத்தச்சட்டத்தை மீண்டும் கொண்டு வரும் சிறிசேன- ராஜபக்சவின் முயற்சிகளை முறியடிப்பதே தமது நோக்கம் எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


 

மாவீரர்கள்