Sanskathi
Mar 13

போயிங் விமான சேவைகளை துருக்கியும் இடைநிறுத்தியது

போயிங் விமான சேவைகளை துருக்கியும் இடைநிறுத்தியது

போயிங் 737 மக்ஸ் 8 மற்றும் 9 ரக அனைத்து விமானங்களினதும் சேவைகளை இடைநிறுத்துவதாக துருக்கி அறிவித்துள்ளது.

எத்தியோப்பிய விமான விபத்தையடுத்து போயிங் விமான சேவைகளை ரத்து செய்ய பல உலக நாடுகள் தீர்மானித்துள்ள நிலையில், அப்பட்டியலில் துருக்கியும் தற்போது இணைந்துக் கொண்டுள்ளது.

போயிங் விமான சேவையை இடைநிறுத்தும் அறிவிப்பை துருக்கி போக்குவரத்து அமைச்சை மேற்கோள்காட்டி துருக்கி அரச ஊடகம் நேற்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டுள்ளது.

விமான பாதுகாப்பை உறுதிபடுத்தும் வகையில் இந்த அறிவிப்பை போக்குவரத்து அமைச்சு வெளியிட்டுள்ளதுடன், மறு அறிவிப்பு வரை இடைநிறுத்தம் அமுலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எத்தியோப்பியன் எயர்லைன்ஸ் விமானம் கடந்த ஞாயிற்றுக்கிழமை விழுந்து நொறுங்கியதில் அதில் பயணித்த 157 பேர் உயிரிழந்தனர்.

குறித்த விபத்தை அடுத்து பிரித்தானியா, சீனா, அவுஸ்ரேலியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட பல உலக நாடுகள் போயிங் ரக விமானங்களின் சேவைகளை இடைநிறுத்தின. ஆனால், விதிவிலக்காக சேவைகளை இடைநிறுத்தப் போவதில்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மாவீரர்கள்