Sanskathi
Mar 14

பிணைமுறி விவகாரம் மாத்திரமின்றி அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்படும் ; தலதா

பிணைமுறி விவகாரம் மாத்திரமின்றி அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்படும் ; தலதா

விசேட நீதிமன்றத்தின் ஊடாக பிணைமுறி விவகாரம் மாத்திரமின்றி அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்படும் என நீதி மற்றும் சிறைச்சாலைகள் புனரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் இடம்பெற்ற பாரிய ஊழல் மோசடிகள் குறித்து விசாரிக்கும் வகையில், இரண்டாவது விசேட மேல் நீதிமன்றம் இன்று (வியாழக்கிழமை) திறந்துவைக்கப்பட்டது.

குறித்த திறப்பு விழாவில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”இந்த விசேட நீதிமன்றத்தின் ஊடாக சகல பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்பட வேண்டும். அது பிணைமுறியோ அல்லது வேறு எதுவுமோ என்பது பிரச்சினையில்லை.

நீதிமன்றத்தை அமைத்து அதற்கான சகல வசதிகளையும் செய்து கொடுத்துள்ளோம். அதற்கு அடுத்த செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டியது விசாரணைகளை செய்யும் நிறுவனங்கள், நீதிமன்ற ஆணைக்குழு, ஊழல் ஆணைக்குழு ஆகியவற்றின் பொறுப்பாகும்.

இந்த இடத்தில் பிணைமுறி மோசடி தொடர்பாக வெளிநாட்டிலிருக்கும் நபரை என்னால் இலங்கைக்கு கொண்டு வர முடியாது. அது தொடர்பாக விசாரணை செய்யும் பிரிவினரே அந்நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்தார்.