Sanskathi
Mar 15

புவி வெப்பமயமாதலை தடுக்க போராடும் சிறுமி: அமைதிக்கான நோபல் பரிசிற்கு பரிந்துரை

புவி வெப்பமயமாதலை தடுக்க போராடும் சிறுமி: அமைதிக்கான நோபல் பரிசிற்கு பரிந்துரை

அமைதிக்கான நோபல் பரிசுக்கு, சுவீடனை சேர்ந்த 16 வயதுமாணவி பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்.

நோர்வேயின் அமைதிக்கான நோபல் பரிசு, தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வரும் நிலையில் இந்த ஆண்டிற்கான, பரிசிற்கு சுவீடனை சேர்ந்த 16 மாணவி கிரேட்டா தன்பெர்க் பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்.

கிரேட்டா தன்பெர்க், பருவநிலை மாற்றம் மற்றும் உலக வெப்பமயமாதலை தடுக்கும் வகையில், சுவீடனின் நாடாளுமன்ற வாசலில் சிறிய பதாகையுடன் அமைதியான போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றார். அத்தோடு  கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தாவோஸ் பகுதியில் நடைபெற்ற ஐ.நா. பருவநிலை உச்சி மாநாட்டில் கலந்துக் கொண்டு உரையாடினார்.

இந்நிலையில் அமைதிக்கான நோபல் பரிசுக்கு சிறுமி கிரேட்டா தபெர்க் பரிந்துரை செய்யப்பட்டுள்ளார். இது குறித்து கிரேட்டா கூறுகையில் ‘அமைதிக்கான நோபல் பரிசுக்கு நான் பரிந்துரைக்கப்பட்டதை மிகுந்த கௌரவமாகவும்  ஆசியாகவும் கருதுகின்றேன்’ என கூறினார்.

தேசிய தலைவர்கள் மற்றும் பல்கலைக்கழக பேராசியர்கள் என பலரும் அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.  இந்த பரிசுக்கு மொத்தம் 304 பேர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர். இதில் 219 தனி நபர்கள், 85 அமைப்புகள் உள்ளதாக நோர்வேயைச் சேர்ந்த நோபல் குழு கடந்த மாதம் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.