Sanskathi
Mar 15

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் வெளியிட்டுள்ள அறிக்கை மிகவும் பாரதூரமான அறிக்கை ; சந்திரிகா

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் வெளியிட்டுள்ள அறிக்கை மிகவும் பாரதூரமான அறிக்கை ; சந்திரிகா

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் வெளியிட்டுள்ள அறிக்கை மிகவும் பாரதூரமான அறிக்கை என்றும் அதனை எவரும் உதாசீனம் செய்யக்கூடாது என்அவும்  முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

அத்தோடு 2018ஆம் ஆண்டு ஒக்டோபர் 26ஆம் திகதி இடம்பெற்ற அரசியல் சூழ்ச்சியே ஶ்ரீலங்கா மீதான ஐ.நா. வின் இறுக்கமான பிடிக்குக் காரணம் என்றும் அவர்  சுட்டிக்காட்டியுள்ளார்.

பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை வெளிப்படுத்தியுள்ளார்.

மைத்திரி – மஹிந்த கூட்டணியின் அரசியல் சூழ்ச்சியால் ஶ்ரீலங்கா பெரும் விளைவுகளை எதிர்காலத்தில் சந்திக்க வேண்டிவரும் என தான்  ஏற்கனவே எச்சரித்ததாகவும்,  அதன் ஒரு பிரதிபலிப்பே ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் காட்டமான அறிக்கை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஶ்ரீலங்காவின் அரசியல் சூழ்ச்சியை முடிவுக்கொண்டுவர அயராது பாடுபட்ட வெளிநாடுகள் தற்போது ஜெனிவாவில் ஶ்ரீலங்காவை தங்கள் பிடிக்குள் வைத்துள்ளதாகவும்,நாட்டின் ஜனாதிபதியும் அரசும் ஐ.நா. வுக்கும் சர்வதேச சமூகத்துக்கும் வழங்கிய பல வாக்குறுதிகள் இன்னமும் நிறைவேற்றப்படவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

இதன் காரணமாகவே  ஶ்ரீலங்காவுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஐ.நா. தீர்மானத்தை வெறும் போர்க்குற்ற தீர்மானம் என  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கருதுவதாகவும்,

முதலில் அதில் உள்ள நாட்டின் எதிர்காலம் நலன் சார்ந்த பரிந்துரைகளை ஜனாதிபதி  உடன் செயற்படுத்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும்  ஶ்ரீலங்கா தொடர்பாக ஐ.நா. வில் நிறைவேற்றப்படவுள்ள புதிய தீர்மானத்தின் பரிந்துரைகளை உடன் செயற்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் ஆட்சியிலுள்ள அனைவரும் எடுக்கவேண்டும்  முன்னாள ஜனாதிபதி இதன்போது வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மாவீரர்கள்