Sanskathi
Mar 15

யாழ். பல்கலையின் பேரணிக்கு சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு ஆதரவு

யாழ். பல்கலையின் பேரணிக்கு சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு ஆதரவு

இலங்கை தொடர்பாக ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் நிலைப்பாடு பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் உணர்வுகளை பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும் என சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

அத்தோடு போர்க்குற்றம் தொடர்பாக சர்வதேச விசாரணையை வலியுறுத்தியும், இலங்கை அரசுக்கு கால அவகாசம் வழங்கக்கூடாது என்ற கோரிக்கையை முன்வைத்தும் யாழ்ப்பாணம் பல்கலைகழக சமூகம் மேற்கொள்ளும் எழுச்சி பேரணிக்கு அந்த அமைப்பு தமது ஆதரவை வெளியிட்டுள்ளளது.

இந்த விடயம் தொடர்பாக சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு இன்று (வெள்ளிக்கிழமை) அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.

குறித்த அறிக்கையில், ‘நாளை இடம்பெறவுள்ள யாழ் பல்கலைகழகத்தின் மாபெரும் எழுச்சி பேரணியில் நாமும் கலந்கொள்வதோடு, எமது முழுமையான ஆதரவினையும் வழங்கி நிற்போம்.

தமிழ் மக்களின் உரிமைகள், நலன்கள் சார்ந்த விடயத்தில் எமது ஆதரவும் ஒத்துழைப்பும் என்றும் இருக்கும்.

இலங்கை தொடர்பாக ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் நிலைப்பாடு பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் உணர்வுகளை பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும்.

தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்கும் பொறிமுறையாகவும் இருக்க வேண்டும்’ எனவும் சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு தெரிவித்துள்ளது