Sanskathi
Mar 15

கிறிஸ்ட்சர்ச் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு மஹிந்த, ரணில் இரங்கல்!

கிறிஸ்ட்சர்ச் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு மஹிந்த, ரணில் இரங்கல்!

நியூசிலாந்து கிறிஸ்ட்சர்ச் பகுதியில் உள்ள மசூதியில் இன்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்த பிரதமர் ரணில் “சமாதான வரலாற்றைக் கொண்ட பல்லின மக்கள் வாழும் நியூசிலாந்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது. அந்த நாட்டு மக்களும் இவ்வாறான விடயங்களை அனுமதிக்க மாட்டார்கள் என” குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, “பள்ளிவாசல்கள் மீதான தாக்குதல்கள் தொடர்பில் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்களை வெளியிடுவதாகவும், பாதிக்கப்பட்டவர்களுக்காக பிரார்த்தனை செய்வதாகவும்” குறிப்பிட்டுள்ளார்.

நியூசிலாந்து, சென்ட்ரல் கிறிஸ்ட்சர்ச் பகுதியில் இன்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 49 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், இந்த சம்பவத்தில் 40 க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ள நிலையில், உயிரிழப்புக்கள் அதிகரிக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.

இதேவேளை, இந்த தாக்குதலுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் எலிசபெத் மகாராணி உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மாவீரர்கள்