Sanskathi
Mar 16

நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் தாக்குதல்: இலங்கையர்களுக்குப் பாதிப்பில்லை

நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் தாக்குதல்: இலங்கையர்களுக்குப் பாதிப்பில்லை

நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தால் இலங்கையர்கள் எவரும் பாதிக்கப்படவில்லை என வெளிவிவகார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இச்சம்பவத்தினையடுத்து வெலிங்டனிலும், கன்பராவிலும் உள்ள சிறிலங்கா தூதரகங்கள் கண்காணித்து வருவதாகவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள இரண்டு பள்ளிவாசல்களில் நேற்று வெள்ளிக்கிழமை தொழுகையின் போது, கண்டுமூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டதில், 49 பேர் உயிரிழந்தனர். மேலும் 48 பேர் படுகாயம் அடைந்தனர்.

இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களில் பெரும்பாலானவர்கள், இந்தியா, துருக்கி, மலேசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் உள்ளடங்குவதாக நியூநிலாந்து அரசாங்கம் அறிவித்துள்ளது.

மாவீரர்கள்