Sanskathi
Mar 18

வெளிநாட்டில் தொழில்புரியும் இலங்கையர்களுக்கு வாக்குரிமையை பெற்றுக்கொடுக்க வேண்டும்

வெளிநாட்டில் தொழில்புரியும் இலங்கையர்களுக்கு வாக்குரிமையை பெற்றுக்கொடுக்க வேண்டும்

வெளிநாட்டில் தொழில்புரியும் இலங்கையர்களுக்கு வாக்குரிமையை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என மக்கள் விடுதலை முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.

நாடாளுமன்றத்தில் இன்று(திங்கட்கிழமை) இடம்பெற்ற குழுநிலை விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே  மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “நாட்டுக்கு வரும் அன்னியச் செலாவணியில் வெளிநாட்டு வேலைவாய்ப்பில் இருந்தே கூடுதலாக கிடைக்கப்பெறுகின்றது.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுச்செல்லும் அதிகமானவர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு கடந்த காலங்களில் முகம்கொடுத்து வந்தனர்.

ஆனால் தற்போது சவுதி, குவைட் போன்ற நாடுகளில் அந்த பிரச்சினை குறைந்துள்ளது. அந்த நாடுகளில் இருக்கும் எமது தூதுவர்கள் நல்லமுறையில் செயற்படுவதால்தான் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது.

அத்துடன் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் இருக்கும் அதிகாரிகளும் வெளிநாட்டு முகவர் நிறுவனங்களும் இணைந்து சில மோசடிகளில் ஈடுபட்டு வருகின்றனர்“ என குறிப்பிட்டுள்ளார்.

மாவீரர்கள்