Sanskathi
Mar 20

நெதர்லாந்து துப்பாக்கிச்சூடு: உயிரிழந்தவர்களுக்கு நாடாளுமன்றில் அஞ்சலி

நெதர்லாந்து துப்பாக்கிச்சூடு: உயிரிழந்தவர்களுக்கு நாடாளுமன்றில் அஞ்சலி

நெதர்லாந்திலுள்ள உட்ரெக்ட் (Utrecht) நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு அந்நாட்டு நாடாளுமன்றில் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

நெதர்லாந்து நாடாளுமன்ற அமைச்சர்கள் மற்றும் சட்டவல்லுநர்கள் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஒரு நிமிட மௌன அஞ்சலியை செலுத்தியுள்ளனர்.

நெதர்லாந்திலுள்ள உட்ரெக்ட் நகரில் நேற்றுமுன்தினம் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் மூன்று பொலிஸ் அதிகாரிகள் உயிரிழந்தனர். இதேவேளை, பலர் படுகாயமடைந்தனர். அவர்களில் சிலரது நிலை கவலைக்கிடமாகக் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் கொக்மென் டானிஸ் (வயது-37) என்ற நபர் நெதர்லாந்து பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மாவீரர்கள்