Sanskathi
Mar 20

ஜூலை மாதம் வரை போயிங் விமான சேவைகள் நிறுத்தி வைக்கப்படும்: கனடா தெரிவிப்பு

ஜூலை மாதம் வரை போயிங் விமான சேவைகள் நிறுத்தி வைக்கப்படும்: கனடா தெரிவிப்பு

போயிங் விமான சேவைகளை ஜூலை மாதம் வரைநிறுத்தி வைக்கவுள்ளதாக கனடா விமான சேவைகள் தெரிவித்துள்ளது.

எத்தியோப்பிய விமான விபத்தை தொடர்ந்து கடந்த வாரம் கனடாவுக்கு சொந்தமான போயிங் விமானங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் நெருக்கடிக்கு மத்தியில் விமான சேவைகளை வழங்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என கனடாவின் விமான சேவைகள் தெரிவித்துள்ளது.

கனடாவின் விமான சேவைகளில் 6 வீதம் வரை போயிங் விமானங்கள் இடம்பிடித்துள்ளன. இவை நிறுத்தப்பட்டுள்ளதால் நெருக்கடி நிலை தோன்றியுள்ளது. விமான சேவைகள் மட்டுமன்றி வாடிக்கையாளர்களும் இதனால் பாதிப்படைந்துள்ளனர் என எயார் கனடா நிர்வாக துணைத் தலைவர் லூசி குய்ல்மெட் கூறியுள்ளார்.

ஏப்ரல் மாத காலம் வரை சுமார் 65000 வாடிக்கையாளர்கள் போயிங் ரக விமானங்களை முன்பதிவு செய்திருந்ததாக கனடா விமான நிறுவனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மாவீரர்கள்