Sanskathi
Mar 20

சமுதாயத்தின் குறைகளைச் சீர்திருத்தும் ‘பல்லாஸ்’ பொம்மைகள் – ஸ்பெயின் மக்களின் விநோத திருவிழா!

சமுதாயத்தின் குறைகளைச் சீர்திருத்தும் ‘பல்லாஸ்’ பொம்மைகள் – ஸ்பெயின் மக்களின் விநோத திருவிழா!

நம் ஊரில் பாரம்பரியமாக இடம்பெறும் காமன் பண்டிகைகளையும், தசரா விழாவில் இராம லீலா என்ற பெயரில் இராவணனின் உருவச் சிலையை எரிக்கும் செயற்பாடுகளையும் நாங்கள் அதிகமாக பார்த்தோ அறிந்தோ இருப்போம்.

மேலைத்தேய நாடுகளிலும் இதேபோன்று, உருவங்களை எரிக்கும் விழாக்கள் இடம்பெறுகின்றமை உலா உலாவின் தேடலில் சிக்கியுள்ளது.

ஸ்பெயினின் மத்திய வெலென்சியா நகரில் ‘பல்லாஸ்’ எனப்படும் பண்டிகை மாபெரும் பொம்மைகளை எரியூட்டும் அம்சத்துடன் நேற்று (செவ்வாய்க்கிழமை) நிறைவடைந்து.  இதனை காண்பதற்காக பல்லாயிரக்கணக்கான உள்ளூர் மக்களும், சுற்றுலாப் பயணிகளும் வருகை தந்திருந்தனர்.

வான வேடிக்கைகள் மற்றும் கேளிக்கைகளுடன் இந்த திருவிழா கடந்த வாரயிறுதி தொடக்கம் நான்கு நாட்களாக இடம்பெற்றது.

புனித ஜோசப் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் வெலென்சியாவில் பல்லாஸ் திருவிழா நடைபெறுகிறது.

திருவிழாவின் இறுதியில் சுமார் 380 க்கும் மேற்பட்ட அலங்கார மற்றும் வண்ணமயமான நினைவுச்சின்னங்கள் “Crema de Fallas” என்ற அம்சத்துடன் எரிக்கப்படுகின்றன.

கரையோர நகரமான வெலென்சியாவில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தினரும் வருடாந்தம் பல்லா எனப்படும் உருவ பொம்மைகளை தயாரித்து திருவிழாவின் இறுதியில் எரியூட்டுவதற்காக வழங்குகின்றனர்.

சமுதாயத்தில் உள்ள குறைகளைச் சீர்திருத்தும் நோக்கோடும், நகைச்சுவைக்காகவும் இவ்வாறான அம்சங்கள் முன்னெடுக்கப்படுவதாக ஸ்பெயின் மக்கள் கூறுகின்றனர்.

மாவீரர்கள்