Sanskathi
Mar 21

பாஜக கூட்டணியைதான் ஜெயலலிதா விரும்பியிருப்பார்: தேசியச் செயலாளர் எச். ராஜா கருத்து

பாஜக கூட்டணியைதான் ஜெயலலிதா விரும்பியிருப்பார்: தேசியச் செயலாளர் எச். ராஜா கருத்து

ஜெயலலிதா இருந்திருந்தாலும் பாஜகவுடன் தான் கூட்டணி வைத்திருப்பார் என பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜா தெரிவித்தார்.

சிவகங்கையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் தேர்தல் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அமைச்சர் பாஸ்கரன், மாவட்டச் செயலாளர் செந்தில்நாதன் எம்.பி. ஆகியோர் தலைமை வகித்தனர்.

கூட்டத்தில், பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா பேசி யதாவது: அதிமுக, பாஜக கூட்டணி இயற்கையானது. கருத்து ஒற்றுமையால் சேர்ந்த கூட்டணி இது. அதிமுகவை இதுவரை தனிப்பட்ட முறையில் நான் விமர்சித்தது கிடையாது.

நாட்டை காப்பாற்றக் கூடிய தலைவராக மோடி உள்ளார். இதனால் அதிமுக எங்களை ஆதரிக்கிறது. இந்தச் சூழ்நிலையில் ஜெயலலிதா இருந்திருந்தால் பாஜகவுடன்தான் கூட்டணி வைத்திருப்பார் என்றார்.