Sanskathi
Mar 21

மன்னார் மனிதப் புதைக்குழி குறித்து இறுதி தீர்மானம்

மன்னார் மனிதப் புதைக்குழி குறித்து இறுதி தீர்மானம்

மன்னார் மனிதப் புதைக்குழியில் தொடர்ந்தும் அகழ்வுப்பணிகளை முன்னெடுப்பதா அல்லது பூரணமாக இதனை நிறுத்துவதா என்பது தொடர்பான இறுதி தீர்மானம் நாளை(வெள்ளிக்கிழமை) எடுக்கப்படவுள்ளது.

அகழ்வுப்பணிகளை முன்னெடுத்து வரும் விசேட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஷ இதனைத் தெரிவித்துள்ளார்.

மன்னார் நீதவான் டீ.சரவணராஜா தலைமையில் மன்னார் நீதிமன்ற வளாகத்தில் இந்த தீர்மானம் தொடர்பான கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, மன்னார் மனிதப் புதைக்குழி அமைந்துள்ள பகுதியில் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மன்னார் சதொச வளாகத்தில் காணப்படும் மனித புதைக்குழியின் அகழ்வுப் பணிகள் கடந்த வருடத்தில் ஆரம்பிக்கப்பட்டிருந்தன. குறித்த புதைகுழியிலிருந்து இதுவரையில் 335 எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன.

அவற்றில், தெரிவுசெய்யப்பட்ட 6 எலும்புக்கூடுகளின் மாதிரிகள் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டு, புளோரிடாவிலுள்ள ஆய்வகத்தில் கார்பன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அதன் அறிக்கை கடந்த வாரம் வெளியிடப்பட்டிருந்தது. குறித்த அறிக்கையில், 1499 தொடக்கம் 1719ஆம் ஆண்டுவரையான காலப்பகுதியில் புதைக்கப்பட்ட மனித சடலங்களின் எச்சங்களே இவை என தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மாவீரர்கள்