Sanskathi
Mar 21

காணி சுவீகரிப்பு முயற்சி கைவிடப்பட்டுள்ளது ; மாவை சேனாதிராஜா

காணி சுவீகரிப்பு முயற்சி கைவிடப்பட்டுள்ளது ; மாவை சேனாதிராஜா

வலி. வடக்கில் முன்னெடுக்கப்படவிருந்த காணி சுவீகரிப்பு முயற்சி கைவிடப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் காணி அமைச்சர் கயந்த கருணாதிலக்க ஆகியோரால் இன்று (வியாழக்கிழமை) காலை இவ்விடயம் தொடர்பாக தனக்கு அறிவிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வலி. வடக்கில் கடற்படை முகாமுக்காக 252 ஏக்கர் காணியை சுவீகரிப்பதறக்காக நில அளவீடுகள் நாளை முன்னெடுக்கப்படவிருந்தன.

252 ஏக்கரில் பெரியளவிலான கடற்படை முகாமை அமைப்பதற்காக ஜேஃ226 பகுதி, நகுலேஸ்வரம் தொடர்புபட்ட நிலங்களையும் சுவீகரிக்க நில அளவீடு செய்யப்படும் என நில அளவைகள் திணைக்களம் அறிவித்திருந்தது.

இந்நிலையில் நாளை நடைபெறவிருந்த காணி அளவீட்டு பணி பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் அறிவுறுத்தலுக்கு அமைய இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இது விடயமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்றத்தின் கவனத்திற்கும் கொண்டுவந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மாவீரர்கள்