Sanskathi
Mar 21

சமுர்த்தி நிவாரணம் தொடர்பில் ஸ்ரீநேசன் சபையில் கேள்வி

சமுர்த்தி நிவாரணம் தொடர்பில் ஸ்ரீநேசன் சபையில் கேள்வி

கிழக்கு மாகாணத்தில் சமுர்த்தி நிவாரணம் பெற தகுதி உள்ளவர்கள் பலர் இருக்கின்றனர். என்றாலும்  தகுதியில்லாதவர்களுக்கும் அதிகளவில் வழங்கப்பட்டிருகின்றது.

இதுதொடர்பாக விடயத்துக்கு பொறுப்பானவர்கள் கவனம் செலுத்தவேண்டும் என தமிழ் தேசியக்கூட்டமைப்பு உறுப்பினர்  எஸ். ஸ்ரீநேசன் இன்று பாராளுமன்றில் தெரிவித்தார்.

அத்துடன் கிழக்கு மாகணத்திலுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு அரசும் அமைச்சும் விசேட திட்டங்களை அறிவிப்பதுடன் அவர்களுக்காக இயங்கும் சங்கங்களுக்கும் உதவிகளை வழங்க வேண்டும். அத்துடன் தொழில் வாய்ப்புக்களை வழங்குவதுடன் பண்ணைகளை அமைக்கவும் சுயதொழில் முயற்சிகளில் ஈடுபடவும் அவர்களுக்கு உதவ வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.