Sanskathi
Mar 21

ரொறன்டோவில் காணாமல் போன தமிழர்!

ரொறன்டோவில் காணாமல் போன தமிழர்!

கனடாவில் தமிழர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக ரொறன்டோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.59 வயதான பேரின்பநாதன் மாணிக்கம் என்பவரே காணாமல் போயுள்ளார். அவரை கண்டுபிடிக்க உதவுமாறு ரொறன்டோ பொலிஸார் பொதுமக்கள் உதவியை நாடியுள்ளனர்.  

திங்கட்கிழமை Eglinton and Allen வீதிகளுக்கு அருகாமையில் மாலை 5:50 மணியளவில் காணப்பட்டுள்ளார். பேரின்பநாதன் மாணிக்கம் என்பவரின் பாதுகாப்பு குறித்து பொலிஸார் கவலை வெளியிட்டுள்ளனர். அவர் குறித்த தகவல் அறிந்தவர்களை தம்மைத் தொடர்புகொள்ளுமாறு ரொறன்டோ பொலிஸார் கோரியுள்ளனர்.

மாவீரர்கள்