Sanskathi
Mar 21

தமிழர் தரப்பு என்பதை பல நாடுகள் ஜெனீவாவில் குறிப்பிட தவறியுள்ளது

தமிழர் தரப்பு என்பதை பல நாடுகள் ஜெனீவாவில் குறிப்பிட தவறியுள்ளது

இலங்கையில் பாதிக்கப்பட்டது தமிழர் தரப்பு என்பதை பல நாடுகள் ஜெனீவாவில் குறிப்பிட தவறியுள்ளதாக வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கூட்டதொடரில் இலங்கை பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்று(வியாழக்கிழமை) நடைபெறவுள்ளது.

இந்தநிலையில் இதுகுறித்து  ஜெனீவாவில் வைத்து கருத்து வெளியிடும் போதே வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்ற ஆணித்தரமான தீர்மானத்தை எவரும் திட்டவட்டமாக தெரிவிக்கவில்லை.

ஆனால் அதனை நோக்கி செல்ல முடியும் என்ற கருத்துப்பட ஒரு சில நாடுகள் குறிப்பிட்டுள்ளன. அத்துடன், இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு நாம் நன்றி தெரிவித்துக்கொள்கின்றோம்“ என தெரிவித்துள்ளார்.

மாவீரர்கள்