Sanskathi
Mar 21

பாதிக்கப்பட்ட மக்கள் எதிர்பார்க்கும் தீர்வை முதலில் அறிந்து கொள்ள வேண்டும்

பாதிக்கப்பட்ட மக்கள் எதிர்பார்க்கும் தீர்வை முதலில் அறிந்து கொள்ள வேண்டும்

பாதிக்கப்பட்ட மக்கள் எதிர்பார்க்கும் தீர்வை முதலில் அறிந்து கொள்ள வேண்டும் என அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவையின் வெளியுறவுப் பொறுப்பாளர் திருக்குலசிங்கம் திருச்சோதி தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கூட்டதொடரில் இலங்கை பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்று(வியாழக்கிழமை) நடைபெறவுள்ளது.

இந்தநிலையில் இதுகுறித்து ஆதவன் செய்திச் சேவைக்கு ஜெனீவாவில் வைத்து கருத்து வெளியிடும் போதே அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவையின் வெளியுறவுப் பொறுப்பாளர் திருக்குலசிங்கம் திருச்சோதி இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது கருத்து வெளியிட்ட அவர், “இந்திய அரசாங்கம் 13வது திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் தமிழர்களின் அரசியல் பிரச்சனைக்கு ஒரு தீர்வு வேண்டும், தமிழர்களின் வாழ்வில் பிரச்சனைக்கு ஒரு தீர்வு வேண்டும் என்ற அடிப்படையில் ஜெனீவாவில் பேசியுள்ளது.

அதனை நாம் ஒரு மாற்றமாகத்தான் பார்க்க வேண்டியுள்ளது. அத்துடன் நாம் அதனை வரவேற்கின்றோம்“ என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மாவீரர்கள்