Sanskathi
Apr 11

குறுகியகால தாமதத்துக்கான தீர்மானத்துக்கு முழு பொறுப்பேற்கிறேன்: மக்ரோன்

குறுகியகால தாமதத்துக்கான தீர்மானத்துக்கு முழு பொறுப்பேற்கிறேன்: மக்ரோன்

நீண்டகால பிரெக்ஸிற் தாமதத்தை தடுத்து குறுகிய காலத்துக்கு மாத்திரமே பிரெக்ஸிற்றை பிற்போடுவதற்கான தீர்மானத்துக்கு ஏனைய ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களின் ஒப்புதலை பெற்றுக்கொண்டதற்கான பொறுப்பை தாம் முழுமையாக ஏற்றுக்கொள்வதாக பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.

பிரெக்ஸிற்றை ஒருவருட காலம் வரை பிற்போடுவதற்கு பெரும்பான்மையான ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் விரும்பிய போதிலும் அது ஐரோப்பிய ஒன்றியத்தின் நடைமுறையை பாதிக்குமென வலியுறுத்தி குறுகியகால தாமதத்துக்கான பரிந்துரையை மக்ரோன் முன்வைத்தார்.

ஐந்து மணிநேர விவாதங்களின் பின்னர் பிரெக்ஸிற்றை ஒக்டோபர் 31 ஆம் திகதி வரை பிற்போடுவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

பிரெக்ஸிற் தாமதம் குறித்து இன்று கருத்து தெரிவித்த மக்ரோன் குறுகியகால தாமதம் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் பிரித்தானியாவுக்கும் சிறந்தது என தெரிவித்தார்.