Sanskathi
Apr 12

பரிஸில் தங்கியிருந்த அகதிகள் வெளியேற்றம்!

பரிஸில் தங்கியிருந்த அகதிகள் வெளியேற்றம்!

பிரான்ஸின் வடக்கு பரிஸில் பாதுகாப்பற்ற முறையில் தங்கியிருந்த 500 அகதிகள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

வடக்கு பரிஸில் A1 நெடுஞ்சாலைக்கு அருகில் பாதுகாப்பற்ற முறையில் தங்கியிருந்தவர்களே இவ்வாறு வெளியேற்றப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பொலிஸாருடன், பல்வேறு தன்னார்வத் தொண்டர்களும் இணைந்து இந்த வெளியேற்ற நடவடிக்கையில் ஈடுபட்டிருந்ததாக குறிப்பிடப்படுகின்றது.

இவ்வாறு வெளியேற்றப்பட்டவர்களில் நூறு பேர் குடும்பத்தினர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் 387 பேர், போர்த்து லா சப்பலில் உள்ள அகதி வரவேற்பு முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இதேவேளை, பரிஸிற்குள் அகதிகள் தங்குவதற்கான மேலதிக தங்குமிடம் அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பிரான்ஸ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.