Sanskathi
Apr 12

இலட்சிய உறுதியுடன் வாழ்ந்த லெப் .கேணல் நீலனின் 15ம் ஆண்டு நினைவலைகள்

இலட்சிய உறுதியுடன் வாழ்ந்த லெப் .கேணல் நீலனின் 15ம் ஆண்டு நினைவலைகள்

ஒரு கட்டுப்பாடான இயக்கத்துடன் முரண்படுவோர் எந்த நிலைக்குச் செல்வர். என்பதைக்கருணாவின் பிளவு நமக்கு வெளிப்படுத்தியது. அதன் மோசமான விளைவுகளில் ஒன்றுலெப்.கேணல் நீலனின் படுகொலை. இயக்கத்தில் இணைந்து கொண்டோர் இலட்சியத்திற்கும்,இயக்கத்திற்கும், அதன் தலைமைக்கும் விசுவாசமாக நடந்து கொள்வேன் எனசத்தியப்பிரமாணம் செய்திருந்தனர். அதன்படி என்றுமே தலைமைக்கு விசுவாசமாக இருந்தார்நீலன். அதுவே அவரது இழப்புக்கும் காரணமாகியது. துரோகம் செய்யப் புறப்படுபவன்தனிப்பட்ட நட்பையும் பொருட்படுத்த மாட்டான் என்பதை நிரூபித்தார் கருணாஆரையம்பதியைப் பிறப்பிடமாகக் கொண்டவர் நீலன்.

விடுதலைப் போராட்டத்தின் ஆரம்பகாலங்களில் புலிகளின் பிரதான தளங்களுள் ஒன்றாக விளங்கியது. ஆரையம்பதி வரைஇக்கிராமத்திலிருந்து நூற்றுக்கு மேற்பட் டார் பேர் மாவீரர் பட்டியலில் இடம்பெற்றனர். தென்தமிழீழத்தின் முதல் பெண் மாவீரர் அனித்தாவும் இந்த ஊரைச் சேர்ந்தவர்தான்.

போராளிகளுக்கு நெருக்கடி ஏற்படும் போதெல்லாம் அவர்களைக் காப்பாற்ற இந்த மக்கள்துடிக்கும் துடிப்பு என்றுமே மறக்க முடியாதவை . அவ்வாறான சம்பவங்களின் பட்டியல் மிகநீண்டது. அன்னை பூபதியின் உண்ணா விரதப் போராட்டங்களில் போது இந்தக் கிராமங்களின்பங்களிப்பும் கணிசமாக இருந்தது.

திருமதி. நிர்மலா நித்தியானந்தன் சிறையிலிருந்து மீட்கப்பட்ட போதும் இந்த ஊருக்குத்தான்முதலில் கொண்டு வரப்பட்டார். யாழ்ப்பாணத்துக்குப் பயணமாகும் வரை அவரைப்பத்திரமாக பாதுகாத்தனர் இந்த மக்கள். உயர் கல்விமான்கள், வணிகர்கள் , படகோட்டிகள் ,இளைஞர்கள், யுவதிகள் என சகல தரப்பு மக்களும் போராட்டத்துக்குக் கை கொடுத்தனர்.

நீலன் பங்களிப்புக்கள் அனைத்தும் வெளியிடப்பட முடியாதவை ஏனெனில் அவர் புலிகளின்புலனாய்வுத்துறையைத் சேர்ந்தவர் இலங்கையின் தலைநகரிலும் புலிகளின் நடவடிக்கைகள்சிலவற்றுக்கு அவர் தலைமை தாங்கியிருந்தார். கருணா பிரிந்து செல்ல முடிவெடுத்த போதுமுதலில் இவரையே கைது செய்ய முடிவெடுத்தார்.

கைதாகியிருந்த போதும் பிரபாகரன் மீதான விசுவாசம் குறையாமலே இருந்தார் இவர். இந்தியஅரசுடன் தொடர்ப்பு கொண்டு இவரைக் கையளித்து சில அனுகூலங்களைக் அடையமுயன்றார் கருணா. ராஜீவ் காந்தி கொலையுடன் இவருக்குச் சம்பந்தமிருக்கிறது என்றுகூறினார். ஆனால் இந்திய விசாரணையாளர்கள் இதனை ஏற்கவில்லை . இவர் இந்தியாவில்இருந்தார்தான் ஆனால் அவருக்கும் ராஜீவ் கொலைக்கும் சம்பந்தமில்லை வேறுபணிகளுக்காகவே வந்திருந்தார். போய் விட்டார் என பதிலளித்தனர்.

கருணாவுக்கு ஏமாற்றமாக இருந்தது. தனது முதலாவது பேரம் பேசலே தோல்வியில் முடிந்ததுகுறித்து ஆத்திரமடைந்தார். மட்டக்களப்பை விட்டு போகும் போது நீலனுக்குமரணதண்டனையை உறுதிப்படுத்தினார்.

அதன்படி கருணாவின் சகாவான துமிலன் தலைமையிலான குழு நீலனை கைகள் கட்டப்பட்டநிலையில் மருதம் முகாமிலிருந்து கூட்டிக் கொண்டு செல்லும் வழியில் 12/04/2004 அன்றுசுட்டுக் கொன்றனர்.

1984ம் ஆண்டு புலிகளின் ஐந்தாவது பயிற்சி முகாமில் பயிற்சி பெற்றவர் நீலன். திருமணமாகிஒரு குழந்தைக்கும் தந்தை . நீலனை மட்டுமல்ல

1.கப்டன் நம்பி (தர்மலிங்கம் பத்மநாதன்) கல்முனை, வீரச்சாவு: 10.04.2004

2.கப்டன் பார்த்தீபன் (யூட்) (பவளசிங்கம் ஜெயகரன்) 2ம் குறிச்சி, தம்பிலுவில், வீரச்சாவு:

09.10.2004

3.கப்டன் நிதர்சன் (நடேசன் தர்மகுணானந்தன்) குரவயல், உடையார்கட்டு, முல்லைத்தீவு

வீரச்சாவு: 06.05.2004

4.கப்டன் சசிக்குமார் (கணபதிப்பிள்ளை திருப்பாதம்) வள்ளுவர்மேடு, பளுகாமம், வீரச்சாவு:

04.04.2004

5.கப்டன் வாமகாந் (கணேசன் லிங்கநாதன்) கிரான், வீரச்சாவு: 04.04.2004

6.லெப்டினன்ட் வினோரஞ்சன் ( செல்லையா மோராஜ் )காயங்குளம், செங்கலடி, வீரச்சாவு:

04.04.2004

7.மேஜர் தமிழீழன் (சதாசிவம் திருக்கேதீஸ்வரன்) மகிழவெட்டுவான்,

ஆயித்தியமலை,வீரச்சாவு: 07.04.2004

8.லெப்டினன்ட் பொதிகைவேந்தன் (வேலு பாண்டியன்) கிந்துக்குளம், கரடியானாறு,

வீரச்சாவு: 09.04.2004

9.2ம் லெப்டினன்ட் சங்கொளியன் (கந்தசாமி அருட்செல்வம்) கடுக்காமுனை,

கொக்கட்டிச்சோலை, வீரச்சாவு: 09.04.2004.

10. வீரவேங்கை மலர்க்குமரன் (தங்கராசா குகன் (மாவளையான்) கரடியானாறு, வீரச்சாவு:

09.04.2004

11.கப்டன் மாலேத்தன் திருநாவுக்கரசு புவனேஸ்வரன் இறால்ஓடை, காயங்கேணி,

மாங்கேணி, வீரச்சாவு: 10.04.2004

12.லெப்டினன்ட் வர்ணகீதன் (மாணிக்கவேல் சபாரத்தினம்) கழுவங்கேணி, மட்டக்களப்பு

வீரச்சாவு: 10.04.2004

13.துணைப்படை வீரவேங்கை மோகன் (காளிக்குட்டி சந்திரமோகன் )கண்ணகிபுரம்,

வாழைச்சேனை, வீரச்சாவு: 10.04.2004

14.லெப்டினன்ட் ராமரதன் : (செல்வன் ராஜேந்திரன்) கதிரவெளி, நாவற்காடு, வீரச்சாவு:

10.04.2004.

15.லெப்.கேணல் : நீலன் : (சீனித்தம்பி சோமநாதன் )ஆரையம்பதி, 12.04.2004.

16.2ம் லெப்டினன்ட் : தாரணன் (செல்வநாயகம் சந்திரகுமார்) நெல்லிக்காடு, ஆயித்தியமல

வீரச்சாவு: 24.04.2004

17.கப்டன் தியாகேஸ்வரன் (நடராசா சுரேஸ்) தளவாய், ஏறாவூர், வீரச்சாவு: 25.04.2004.

18.லெப்டினன்ட் டனிசன் (செல்லத்துரை ஜெசிதரன் ) மாங்கேணி, வீரச்சாவு: 25.04.2004

19. 2ம் லெப்டினன்ட் செல்வவீரன் (சேதுநாதப்பிள்ளை பிரபா) : 4ம் குறிச்சி, சித்தாண்டி,

வீரச்சாவு: 25.04.2004

20.மேஜர் நேசராஜ் (தாமோதரம் சூரியா) கதிரவெளி, வாகரை, வீரச்சாவு: 01.05.2004.

21.மேஜர் : பகலவன் ( சிவானந்தன் சிறிமுரளி )நொச்சிமுனை, வீரச்சாவு: 06.05.2004

22. 2ம் லெப்டினன்ட் றோகிதன் (பரமானந்தம் புனிதலிங்கம்) முனைக்காடு, வீரச்சாவு:

20.05.2004.

23. மேஜர் அன்புநேசன் மட்டக்களப்பு வீரச்சாவு: 05.07.2004.

24.லெப்.கேணல் : சேனாதிராசா (இராமலிங்கம் பத்மசீலன் )ரமேஸ்புரம், செங்கலடி வீரச்சாவு:

13.07.2004

25.லெப்.கேணல்: பாவா (தயாசீலன்) (செல்வராசா ஜெகதீஸ்வரன்) கள்ளியதீவு, திருக்கோவில்,

வீரச்சாவு: 20.08.2004.

26. லெப்.கேணல் யோகா (நாகலிங்கம் ஜீவராசா) : வெல்லாவெளி, வீரச்சாவு: 20.08.2004.

27.கப்டன் வந்தனன் பாலசிங்கம் புவிராஜ் : அரசடித்தீவு, வீரச்சாவு: 26.08.2004

28. கப்டன் வர்ணரூபன் (மகேஸ்வரன் ருசான்குமார்) வாழைச்சேனை, வீரச்சாவு: 17.11.2004

குறிப்பிட்ட போராளிகளை பழிவாங்கியிருந்தார் கருணா.இதே போல் தமிழர் உரிமைக்கு குரல் கொடுத்ததற்காக மாமனிதர் ஜோசெப் பரராசசிங்கம்,பேராசிரியர் தம்பையா, ஊடகவியலாளர் G.நடேசன் இவர்களையும் பலிவாங்கினார் கருணா.

அதுமட்டுல்ல கூட்டுப் பாலியல் வன்முறைக்கு ஜனாவின் பின் முடிவெடுத்தவர்களின்ஒருவராகவும் விளங்கினார். ஜனா தலைமையேற்ற போது ஆரையம்பதியைச் சேர்ந்த விஜிஎன்ற மாணவி கூட்டுப் பாலியல் வன்முறைக்குள்ளாகி படுகொலை செய்யப்பட்டார். கருணாகுழு 29.01.2006 அன்று வெலிக்கந்தையில் தமிழர் புனர் வாழ்வுக்குக் கழகத்தைக்பணியாளர்கள் பயணித்த வாகனத்தைக் கடத்தியது வட்டக்கட்சியைச் சேர்ந்த செல்வி.பிறேமினி தனுஸ்க்கோடி என்ற யுவதி இவ்வாறு கூட்டுப் பாலியல் வன்முறைக்குள்ளானார்.

கருணாவின் மகள் ...... வயதை அடையும்போது தான் இந்தக் கொடூரத்தைக் செய்தமை குறித்துசிந்திப்பார்.

நீண்ட காலம் அவருக்கு நண்பனாக இருந்த நீலனைக் கொல்ல முடிவெடுத்தவர்க்கு இந்தவிடயத்தைக் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது . கருணாவின் பிரச்சினைக்கு பிறகுமட்டக்களப்பில் ஒருவர் சொன்னார் அம்மானுக்கு ஒரேயொரு தெரிவு தான் இருக்கும் எந்தநேரமும் போதையில் இருப்பதுதான் அது. அவருடைய மன சாட்சி அவரைக் குத்திக்கொண்டுத்தான் இருக்கும்.