Sanskathi
Apr 13

யார் தர்மகர்த்தா ?

யார் தர்மகர்த்தா ?

ஆலயங்களில் பொங்கல் விழா மற்றும் வருடாந்த உற்சவங்கள் ஆரம்பமாகி விட்டன.புளியம்பொக்கணை, பொறிக்கடவை அம்மன் என்பனவற்றைத் தொடர்ந்து உள்ளூர் கோயில்திருவிழாக்கள் நடந்து நல்லூர் கந்தசுவாமி, மாவிட்டபுரம், செல்வச்சந்நிதி என்று அவைதொடரும். எப்போதுமே நல்லூர்க் கந்தன் ஆலயத்தில் ஒரே நிர்வாகம்தான். பொதுவாகஅவர்கள் யாருக்காகவும் நடைமுறைகளை மாற்றுவதில்லை. பூசை நேரம் அல்லாத நேரத்தில் வந்த போது அப்போதைய பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்காவால் கூட உள்ளே செல்ல
முடியவில்லை. ஆலய நிர்வாகத்தைக் கைப்பற்றுவதில் பொதுவாக ஊர்களில் பெரும்போட்டிநிலவும். சில கோயில் நிர்வாகம் தொடர்பாக நீதிமன்றில் வழக்குகளும்தொடரப்பட்டிருக்கின்றன. கோயில் சம்பந்தப் பட்ட விடயங்களில் வடக்கில் தர்மகர்த்தாஅல்லது பரிபாலன சபைத் தலைவர் நிர்வாகத்தை நடத்துவார். கிழக்கில் இவர்களைவண்ணக்கர் என அழைப்பர்.பழைய கதை ஒன்றுண்டு. முன்னொரு காலத்திலே மனிதர்கள்பேசும் மொழியிலேயே மிருகங்களும் பேசின. இந்நிலைமை பல விதங்களிலும் பயன்பாடாகஇருந்தது. ஒரு நாள் வில்லங்கமொன்றும் ஏற்பட்டது. அரசனிடம் விவகாரம் போனது.ஒரு நாய்தான் தெருவில் அம்மணமாக நிற்கும் போது ஒருவன் வந்து தடியால் அடித்து விட்டான் என்றும்இதற்கு நியாயம் வேண்டும் என்றும் சொன்னது. நாயை அடித்ததற்கு தண்டனை வழங்குவதா?அதிலும் நான் முறைப்பாடு செய்த பின்னர் அதைக் கண்டு கொள்ளாமல் இருப்பதா?கண்டுகொள்ளாவிட்டால் நாய்கள் தமக்கிடையே இந்தச் செய்தியைப் பரப்பி விடுமே.அதைவிட மோசம் அண்டை நாட்டு நாய்களுக்கு இந்த விடயம் தெரிந்தால் எமது நாட்டில்நாய்க்கு நீதி கிடைக்கவில்லை என்று அவை செய்திகளைப் பரப்புமே. இன்னொரு விடயம்நாய்கள் ஒத்துழையாமைப் போராட்டத்தை நடத்தினால் கள்வர்களையும் பிடிக்கமுடியாமற் போகும்  இவ்வாறு பலவித சிந்தனைகளும் அரசருக்கு உதித்தன. என்ன நடந்தாலும்நாய்க்கு நீதி வழங்குவதென்றே முடிவெடுத்தார்.நாயை அடித்தவரைத் தேடிப் பிடித்தார்கள்.சம்பவத்தைக் கண்ணால் கண்ட சாட்சிகள் வரவழைக்கப்பட்டார்கள். நீதி சொல்வதற்கென்றுஅறிஞர் குழாமையும் அழைத்தார். அதுதான் அரசன் செய்த மகா தவறாகி விட்டது.ரூசூ39;ரூசூ39;நாய்க்கென்ன வேலை நடுவீதியிலே?ரூசூ39; என்று கேட்டார் ஒரு அறிஞர்.அடித்தவருக்கு கையைவெட்ட வேணும் என்றார் ஒருவர். இல்லை முறித்தால் போதும் என்றார் மற்றொருவர்.காலை உடைத்து விட்டால் இழுத்து இழுத்து நடப்பான். இனி இப்படிச் செய்யமாட்டான் என்றார் இன்னொருவர். போன வழக்கில் நீர் பிழையான தீர்ப்பொன்றுசொன்னீர் என்று ஒருவர் மீது மற்றறொருவர் குற்றஞ்சாட்டினார். இல்லையில்லை நீர் சொந்த வாழ்க்கையில் இன்ன இன்ன வேலைகளைச் செய்தீர்  என்று குற்றம் சுமத்தியவருக்குகுற்றச்சாட்டை அடுக்கினர். குற்றஞ்சாட் டப்பட்டவர் ஒருமித்த கருத்து ஏற்படவேயில்லை.
மொத்தத்தில் ஜெனீவாவுக்குப்போன தமிழ்க்குழுக்கள் போல நவக்கிரகங்களாக நின்றனர்இ நீதிசொல்ல வந்தோர். எல்லாவற்றையும் கேட்ட அரசருக்கு தலை சுற்றியது. இவ்வளவுக்கு ஒரு சிலர் மௌனமாக இருந்தார்கள். அவர்கள் யாராவது புது ஐடியா கொடுத்தால் அவரை மனிதத் துரோகி என்று பட்டம் சூட்டக்காத்திருந்தனர். கடைசியில் அரசர் ஒரு முடிவெடுத்தார். நாயிடமே கேட்போம் என்ன தண்டனைவழங்குவது என்று. நாய் வழங்கும் தீர்ப்பை அமுல்படுத்துவோம் என்றார். இதற்கு எல்லோரும்சம்மதித்தனர். இல்லாவிட் டால் அரசர் வழங்கும் பிரயாணப்படி வருகைக்கான கொடுப்பனவு மதிய உணவு எல்லாம் கிடைக்காமல் போய்விடுமே.அரசர் சொன்னமுடிவின்படி நாயின்தீர்ப்புக்காக அனைவரும் காத்திருந்தனர். குண்டூசி விழுந்தாலும் சத்தம் கேட்கும் அளவுக்குஅமைதி இந்த மனிதனை ஒரு கோயில் தர்மகத்தா ஆக்குங்கள்உரத்துச் சொன்னது நாய்.எல்லோருக்கும் இந்தத் தீர்ப்பை கேட்டதும் அதிர்ச்சி. குற்றஞ்சாட்டப்பட்ட மனிதனுக்கோ தன்காதுகளையே நம்பமுடியவில்லை. நீதி சொல்ல வந்தோரில் ஒருவர் அரசருக்கு கேட்காதமாதிரிமற்றவரிடம் முணுமுணுத்தார்.நாய் சேம் சைட் கோல் போடுகிறது (யாருக்காவது ஏதாவது
நாட்டின் பிரதமரோ ஒரு கட்சியின் உத்தியோகபூர்வ பேச்சாளரோ நினைக்கு வந்தால் அதற்குநாம் பொறுப்பல்லபந்திக்கு முந்து என்பார்கள் அப்போதும் செல் சேவீஸ் முறை இருந்தது.
சாப்பாட்டை நினைத்தவாறு தீர்ப்புச்சொல்ல வந்த நியாயவான்கள் அனைவருமே போய்விட்டார்கள். இதுதான் தருணம் என நினைத்த அரசர் நாயிடம் மெதுவாகக் கேட்டார் நான் ஒருவருக்கும் சொல்லமாட்டேன். எனக்கு மட்டும் இரகசியமாகச் சொல். உனக்கு மட்டும்மேலதிகமாக சூப் கிடைக்க ஏற்பாடு செய்கிறேன் எதற்காக இப்படித் தீர்ப்பு சொன்னாய். இதெல்லாம் ஒரு தண்டனையா?ரூசூ39;மெதுவான குரலில் நாய் சொன்னது யாரிடமும்சொல்லாதீர்கள். பிறகு என்னைக் கிண்டல் பண்ணுவார்கள். நான் போன பிறவியில் கோயில்தர்மகர்த்தாவாக இருந்தேன். என்னை எவரும் கேள்வி கேட்க முடியாது. கேட்டாலும் நான்உரத்துச் சொல்லும் பாணியில் சொன்னால்இஅதுதான் உண்மையாக இருக்கும் என்று நம்பிவிடுவார்கள். நான் கோயில் சொத்தை நன்றாக அனுபவித்தேன். பல்வேறு இடங்களில்எனக்காக சொத்து வேண்டி குவித்தேன். எனது மரணச்சடங்குக்கு பல்லாயிரம் பேர் கூடினர்.எனது அஞ்சலி கூட்டத்தில் பலர் உரையாற்றினர். அந்த உரைகளுக்கு முற்றிலும் எதிர்மாறாக
இருந்தது சித்திரபுத்திர நாயனாரின் கணக்கு. அதனால் அவரின் தீர்ப்பின்படி நான் நாயாகப்பிறக்க நேர்ந்தது. எனக்கு அடித்தவனுக்கு நீங்கள் கோயில் தர்மகத்தா பதவியை வழங்கினால்
அவன் நிச்சயம் கோயில் சொத்தை தின்பான். அவனும் என்னைப்போல நாயாகப் பிறந்துகண்டவனிடமும் அடிவாங்க வேண்டிவரும். இந்த விசயம் எங்கள் இருவரிடமுமே இரகசியமாக
இருக்கட்டும். டீல் ஓக்கேயா?(இந்த இடத்திலும் யாரையும் நினைக்காதீர்கள்).அரசர் கட்டைவிரலை உயர்த்தி சொன்னார்.நாய் எதிர்பார்த்த தீர்ப்பு கிடைத்தாலும் சூப்பை நக்கித்தானே குடிக்க வேண்டும். அதை நாய் செய்தது.இப்போது வாசகரிடம் ஒரு விடயத்தைமுன் வைக்கிறோம். அரசியல்வாதிகளிலோ அல்லது வேறெந்தப் பதவிகளில் இப்போரிலோ யாரைக் கோயில் தர்மகர்த்தா ஆக்க நினைக்கிறீர்கள் என உங்கள் நண்பர்களிடம் ஒருவாக்கெடுப்பு நடத்துங்கள். யாருக்கு கூடுதலாக வாக்கு விழுகிறது எனப் பார்ப்போம்.