Sanskathi
Apr 19

இலங்கை தேயிலை உற்பத்தி புதிய ஆய்வு..

இலங்கை தேயிலை உற்பத்தி புதிய ஆய்வு..

காலநிலை மாற்றமானது, 2050ம் ஆண்டாகும் போது, இலங்கை தேயிலை உற்பத்திக்கு ஏதுவான நிலத்தன்மையில் பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கப்படுகிறது.

புதிய ஆய்வு அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை தேயிலை உற்பத்திக்கு ஏதுவான நிலத்தன்மையை கொண்டிருப்பதானால், இலங்கையின் பிரதான பெருந்தோட்டக் கைத்தொழில் துறையாக தற்போது தேயிலை தொழிற்துறை நிலவுகிறது.

எனினும் பூகோள காலநிலை மாற்றத்தின் விளைவால், 2050 தொடக்கம் 2070ம் ஆண்டுகளில் இந்த நிலைமையில் பாதகமான மாற்றம் ஏற்படும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது.

இதன்படி இந்த காலப்பகுதியில் இலங்கையில் தேயிலை உற்பத்திக்கு அதிக சாதகமான தன்மைக் கொண்ட நிலத்தின் அளவு 10.5 சதவீதமாக குறைவடைவதுடன், நடுத்தர சாதமான தன்மைக் கொண்ட நிலத்தின் அளவு 17 சதவீதமாகவும், ஓரளவுக்கு தேயிலை உற்பத்திக்கு ஒத்துழைக்கும் நிலத்தின் அளவு 8 சதவீதமாகவும் குறைவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.