Sanskathi
Apr 21

கொடூர செயலில் ஈடுப்பட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் - மனோ கணேசன்

கொடூர செயலில் ஈடுப்பட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் - மனோ கணேசன்

தற்கொலைக் குண்டுத் தாக்குதல் தொடர்பில் ஒரு வாரத்திற்கு முன்னதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டது என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

தனது அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் மனோ கணேசன் இதனைத் தெரிவித்துள்ளார். தமது அமைச்சுப் பாதுகாப்புப் பிரிவினைச் சேர்ந்த அதிகாரிகள் இது குறித்து தமக்கு எச்சரிக்கை விடுத்திருந்தனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் அரசியல்வாதிகளை இலக்கு வைத்து தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் இரண்டு தற்கொலைதாரிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தமக்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்திருந்தனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சுயநலத்துக்காக அப்பாவிகளை கொல்லும் அரசியல்! அமைச்சர் மனோ கணேசன் காட்டம்வெடிப்பு சம்பவங்கள் அனைத்தும் அரசியல் நோக்கங்களுக்காக திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் வெடிப்பு சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு வருகை தந்து பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,மீண்டும் மீண்டும் நாட்டில் குழப்பத்தினை ஏற்படுத்த ஒரு போதும் அனுமதிக்க முடியாது என்றும் கூறியுள்ளார்.இந்த கொடூர செயலில் ஈடுப்பட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்றும் அமைச்சர் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.