Sanskathi
Apr 22

யுத்தம் மீண்டும் தலைதூக்குமானால் அதனை உடனடியாக முடிவுக்கு கொண்டு வரவேண்டும்

யுத்தம் மீண்டும் தலைதூக்குமானால் அதனை உடனடியாக முடிவுக்கு கொண்டு வரவேண்டும்

வணக்க ஸ்தலங்களை குறிவைத்து தாக்குதல் நடத்துகின்ற எவராக இருந்தாலும் கண்டறியப்பட்டு, இவ்வாறான சம்பவங்கள் மேலும் இடம்பெறாத அளவிற்கு முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும் என மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு, சியோன் தேவாலயத்தில் குண்டு வெடிப்பால் ஏற்பட்ட பாதிப்புக்களை பார்வையிடுவதற்கு நேற்று அசாத்சாலி சென்றுள்ளார்.

இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து அவர் கருத்து தெரிவிக்கையில்.கிறிஸ்தவ மக்கள் தமது விழாவை கொண்டாடும் வேளையில் இந்த மாதிரியான குண்டுவெடிப்பினை நினைத்து நாங்கள் கவலையடைகின்றோம்.

விசேடமாக நாங்கள் கிறிஸ்தவ மக்களுக்கு கூறிக்கொள்வது என்னவென்றால் இந்த மாதிரியான காலகட்டத்தில் நீங்கள் மிகவும் அமைதியை கடைப்பிடிக்க வேண்டும்.எல்லா மக்களும் ஒன்றுப்பட்டு யுத்தத்தினை இந்த நாட்டில் இல்லாமல் செய்வதற்கு எடுத்த முயற்சியின் பலனாக 30 வருடங்களுக்கு பின்னர் யுத்தம் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டது.

அது மீண்டும் தலைதூக்குமானால் அதனை உடனடியாக முடிவுக்கு கொண்டு வரவேண்டும்.எந்த இனமாக இருந்தாலும் கவலையில்லை இந்த மாதிரியான வணக்க ஸ்தலங்களை குறிவைத்து தாக்குதல் நடத்துகின்ற எவராக இருந்தாலும் கண்டறியப்பட்டு இவ்வாறான சம்பவங்கள் மேலும் இடம்பெறாத அளவிற்கு இதனை முடிவுக்கு கொண்டு வரவேண்டும்.

இந்த சம்பவத்தினை அடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக கிழக்கு மாகாணத்தில் உள்ள வைத்தியர்களை இதற்காக நாங்கள் விசேடமாக வரழைத்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.