Sanskathi
Apr 25

கொழும்பில் 21 வெடிகுண்டுகளுடன் மூவர் கைது

கொழும்பில் 21 வெடிகுண்டுகளுடன் மூவர் கைது

கொழும்பு – முகத்துவாரம் பகுதியில் 21 வெடிகுண்டுகள் மற்றும் வாள்களுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவும் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பிலேயே குறித்த மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடமிருந்து இந்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டுள்ள குறைந்த சக்தி கொண்ட 21 கைக்குண்டுகளும் 6 வாள்களும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.