Sanskathi
May 14

அமெரிக்காவுக்கு எதிராக செயல்பட்டால் கடும் பாதிப்பை சந்திக்க நேரிடும் – டிரம்ப் எச்சரிக்கை..

அமெரிக்காவுக்கு எதிராக செயல்பட்டால் கடும் பாதிப்பை சந்திக்க நேரிடும் – டிரம்ப் எச்சரிக்கை..

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான உறவு முற்றிலும் சீர்குலைந்துள்ள நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தின், ஃபுஜைரா துறைமுகம் அருகே 4 வர்த்தகக் கப்பல்கள் தாக்குதலுக்கு உள்ளாகின.

இது எத்தகைய தாக்குதல் என்பது குறித்தோ, அல்லது யார் தாக்குதல் நடத்தியது என்பது குறித்தோ எதுவும் தெரிவிக்கப்படவில்லை.எனினும் இந்த தாக்குதலின் பின்னணியில் ஈரான் இருக்கலாம் என அமெரிக்கா சந்தேகிக்கிறது.

இந்நிலையில், வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப் ஈரான் தொடர்பாக சில விஷயங்களை கேள்விப்படுவதாகவும் , அமெரிக்காவுக்கு எதிராக ஈரான் ஏதாவது செய்யுமானால் மிகக் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.