Sanskathi
May 14

இன்றும் நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுல்!

இன்றும் நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுல்!

நாட்டின் நிலைமையைக் கருத்திற்கொண்டு பொலிஸ் ஊரடங்குச் சட்டம் நாடு முழுவதும் அமுல்படுத்தப்படவுள்ளது.

இதன்படி, இன்று இரவு 9 மணியிலிருந்து நாளை காலை 4 மணிவரை ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.

அத்துடன் கம்பஹா மாவட்டத்தில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் இன்று மாலை 7 மணியிலிருந்து நாளை காலை 6 மணிவரை அமுல்படுத்தப்படுகிறது.

அதேபோல் வடமேல் மாகாணத்தில் மாலை 6 மணியிலிருந்து நாளை காலை 6 மணி வரை ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.