Sanskathi
May 15

பயங்கரவாதத்தை துடைத்தெறிய அனைத்து நாடுகளும் கைகோர்க்க வேண்டும் - ஜனாதிபதி

பயங்கரவாதத்தை துடைத்தெறிய அனைத்து நாடுகளும் கைகோர்க்க வேண்டும் - ஜனாதிபதி

இலங்கையில் அண்மைக்காலமாக நிலைகொண்டுள்ள பயங்கரவாதத்தை துடைத்தெறிய அனைத்து நாடுகளும் கைகோர்க்க வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்துள்ளார்.

பீஜிங்கில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்று வரும் ஆசிய நாகரிகங்கள் குறித்த மாநாடொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

உத்தியோகப்பூர்வ பயணமொன்றை மேற்கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நேற்று முன்தினம் சீனாவிற்கு  விஜயம் செய்திருந்தார். ஜனாதிபதியுடன் 27 பேரடங்கிய பிரதிநிதிகள் உடன் சென்றுள்ளனர்.

ஆசிய நாகரிகங்களுக்கு இடையிலான பரிமாற்றங்கள் மற்றும் பரஸ்பர கற்றல் செயற்பாடுகள் என்ற தொனிப்பொருளின் கீழ் சீனாவில் இம்மாநாடு இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.