Sanskathi
May 15

முஸ்லிம் அரசியல் தலைவர்களின் பொறுப்பற்ற தன்மையே இஸ்லாமிய அடிப்படைவாதம் தோற்றம் பெறக் காரணம்"

முஸ்லிம் அரசியல் தலைவர்களின் பொறுப்பற்ற தன்மையே இஸ்லாமிய அடிப்படைவாதம் தோற்றம் பெறக் காரணம்"

முஸ்லிம் அரசியல் தலைவர்களின் பொறுப்பற்ற தன்மையே  இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புக்கள் தோற்றம் பெறுதற்கு  பிரதான காரணியாக அமைந்துள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதர்ஷய யாப்பா தெரிவித்தார்.

நாட்டு மக்கள் அனைவரும் ஒரே சட்டத்தை பின்பற்ற வேண்டும் .  மதங்களை அடிப்படையாகக் கொண்டு சட்டங்கள் வகுக்கப்படும் போது இனங்களுக்கிடையில் முரன்பாடுகளே ஏற்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார். 

பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியாலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தீவிரவாதிகளின் தாக்குதலை தொடர்ந்து  நாட்டில் இன்றும் தேசிய பாதுகாப்பு  உறுதிப்படுத்தப்படவில்லை. தேசிய பாதுகாப்பின் பலவீனத்தினால்  பொருளாதாரமும் தொடர்ந்து பின்னடைவினை  சுற்றுலாத்துறையின் வீழ்ச்சியினால்  எதிர்க்கொண்டு வருகின்றது. 

இன்று  நாட்டில்  முறையான  தலைமைத்துவத்தின் கீழ் அரசாங்கம் ஒன்று செயற்படாமையின் காரணமாகவே அரச அதிகாரிகள் அனைவரும் பொறுப்பற்ற விதமாக செயற்படுகின்றார்கள் எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

மாவீரர்கள்