Sanskathi
May 25

தமிழ் தலைமைகளுக்கு துரைரட்ணம் எச்சரிக்கை!

தமிழ் தலைமைகளுக்கு துரைரட்ணம் எச்சரிக்கை!

தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றாவிட்டால் அவர்கள் தமிழ் சமூகத்திலிருந்து அந்நியப்படுத்தப்படுவார்கள் என கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் இரா. துரைரட்ணம் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு வாவிக்கரை வீதியில் உள்ள அவரது காரியாலயத்தில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வௌியிட்ட அவர், “அமைச்சர் ரிஷாட் பதியுதீனிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், அவர் பதவியில் இருந்து இராஜினமா செய்யவேண்டும் .

கிழக்கில் மூன்று இனங்களும் ஐக்கியமாகவும் ஒற்றுமையாகவும் வாழ வேண்டுமாயின் இந்த விடயங்களில் ஜனாதிபதி, பிரதமதர், மத்திய அரசாங்கம் இனியாவது தவறிழைக்காமல், இதனை சீரமைத்து கிழக்கில் பிரித்தாளும் தந்திரத்தை கைவிட்டு கிழக்கு மக்கள் ஒன்றாக வாழ்வதற்கு வழிசமைக்கவேண்டும்.

இந்த விடயங்களில் அரசு பாராமுகமாக இருந்தால், கிழக்கு மாகாண தமிழர்கள் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தங்களின் பலத்தை நிரூபித்துக்காட்டுவார்கள்” என மேலும் தெரிவித்துள்ளார்.