Sanskathi
May 26

கைது செய்யப்பட்ட குருணாகல் வைத்தியர் தொடர்பான விசாரணை அறிக்கை நாளை

கைது செய்யப்பட்ட குருணாகல் வைத்தியர் தொடர்பான விசாரணை அறிக்கை நாளை


குருணாகல் வைத்தியசாலையில் பணியாற்றும் 42 வயதுடைய செய்கு சியாப்தீன் மொஹமட் சாபி என்ற வைத்தியர் தொடர்பில் நாளை (27) இடம்பெறவுள்ள இலங்கை மருத்துவ சபையின் கூட்டத்தில் அவதானம் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

குறித்த வைத்தியர் தொடர்பில் ஆராய்வதற்கான ஒரு சிறப்பு குழு நியமனம் செய்யப்பட்டுள்ளது. 

இக்குழுவின் ஆரம்ப கட்ட விசாரணை அறிக்கை மருத்துவ சபைக்கு நாளை வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. 

இதேவேளை, செய்கு சியாப்தீன் மொஹமட் சாபி என்ற வைத்தியர் இதுவரை 8 ஆயிரம் சத்திர சிகிச்சை செய்ததாக ஒப்புக்கொண்டதாக வைத்தியசாலை பணிப்பாளர் நேற்று ஊடகவியலாளர் சந்திப்பில் குறிப்பிட்டிருந்தார்.