Sanskathi
Jun 12

ஜனாதிபதியின் செயற்பாடு பற்றி பாராளுமன்றத்தில் தீர்மானம் எடுக்க தயாராகும் அரசாங்கம்

ஜனாதிபதியின் செயற்பாடு பற்றி பாராளுமன்றத்தில் தீர்மானம் எடுக்க தயாராகும் அரசாங்கம்

அமைச்சரவை கூட்டத்தை தொடர்ந்தும் ஜனாதிபதி இரத்துச் செய்து வருவாராக இருந்தால் அது தொடர்பாக முன்னெடுக்கப்படக் கூடிய நடவடிக்கைகள் தொடர்பாக பாராளுமன்றத்தில் தீர்மானிக்கப்படுமென அரசாங்கம் தெரிவித்துள்ளது.

பாராளுமன்ற தெரிவுக்குழு விவகாரம் தொடர்பான சர்ச்சையால் அந்த குழுவை இரத்துச் செய்யும் வரையில் தான் அமைச்சரவையை கூட்ட மாட்டேன் என ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

இதன்படி நேற்றைய தினம் அமைச்சரவை கூட்டம் நடக்கவில்லை.

இந்நிலையில் இந்த விடயம் தொடர்பாக ஜனாதிபதி பாராளுமன்றத்திற்கு பொறுப்பு கூற வேண்டுமெனவும் இதுபற்றி பாராளுமன்றத்தில் தீர்மானம் எடுப்போம் எனவும் அரசாங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.