Sanskathi
Jun 15

நாட்டு மக்களை ஏமாற்றும் நாடகத்தை அரசாங்கம் நடத்திக்கொண்டிருக்கின்றது - பிரதீபன்

நாட்டு மக்களை ஏமாற்றும் நாடகத்தை அரசாங்கம் நடத்திக்கொண்டிருக்கின்றது - பிரதீபன்

நாட்டு மக்களை ஏமாற்றும் நாடகத்தை அரசாங்கம் நடத்திக்கொண்டிருக்கின்றது என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளர் பெரியசாமி பிரதீபன் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதத் தாக்குதலுடன் தொடர்புப்பட்டதாக முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், ஆளுநர்களான அசாத் சாலி, ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

ஆனால், நீதிமன்றத்தை நாடி இவர்கள் குறித்து விசாரணை நடத்தாமல் வெறுமனே நாடாளுமன்றத்தில் தெரிவுக்குழு அமைத்து விசாரணை நடத்துவது சட்டத்திற்கு புறம்பான செயற்பாடு என்பதுடன் மக்களை ஏமாற்றும் கபட நாடகம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஹற்றனில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பிராந்திய காரியாலயத்தில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது குறித்து அவர் தெரிவிக்கையில், “நூற்றுக்கணக்கான உயிர்களைக் காவுகொண்ட இந்த பயங்கரவாத தாக்குதலோடு தொடர்புபட்டவர்கள் குறித்து நிலையான விசாரணை ஒன்றை நடத்த அரசாங்கம் தவறியுள்ளது. இது தொடர்பாக அரசாங்கம் மௌனமாக இருப்பதிலும் எமக்கு சந்தேகம் ஏற்படுகின்றது.

அத்துடன், முஸ்லிம் வாக்குகளை பெற்றுக் கொள்வதற்காகவே இவ்வாறான குற்றச் செயல்களுடன் தொடர்புபட்டவர்களை அரசாங்கம் காப்பாற்றி வருகின்றது. இது உண்மையில் நாட்டிற்கு செய்கின்ற துரோக செயலாகும்.

எனவே இந்த பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புப்பட்டவர்கள் குறித்து முறையான விசாரணையை நடத்துவதற்கு அரசாங்கம் முன்வர வேண்டும்” என்று தெரிவித்தார்.

மாவீரர்கள்