Sanskathi
Jun 18

அரசாங்கம் மக்களின் உண்மையான பிரச்சினைகளை மறக்கடிக்கிறது - பந்துல

அரசாங்கம் மக்களின் உண்மையான பிரச்சினைகளை மறக்கடிக்கிறது - பந்துல

காலத்துக்கு காலம் வெவ்வேறு தலைப்புக்களில் கலந்துரையாடல்களை நடத்திக் கொண்டு அரசாங்கம் மக்களின் உண்மையான பிரச்சினைகளை மறக்கடிக்கச் செய்து கொண்டிருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன கூறியுள்ளார். 

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். 

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடத்தப்பட்டு ஒரு மாதத்துக்கும் அதிக காலம் கடந்துள்ள போதுலும், அதற்காக கிடைக்க வேண்டிய தீர்வு இதுவரை கிடைக்கவில்லை என்று அவர் கூறியுள்ளார். 

தேசிய பாதுகாப்புக்காக தீர்வு காண்பதற்காக அரசாங்கம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். 

இதன் காரணமாக தேசிய பொருளாதாரத்துக்கு பாரிய பிரச்சினைகள் பல எழுந்துள்ளதாகவும், அதனை தடுப்பதற்கு உடனடியாக செயற்பட வேண்டும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன கூறியுள்ளார்.

மாவீரர்கள்