Sanskathi
Jun 26

காவிகளின் அரசியலுக்குப் பலியான தமிழ் - முஸ்லிம் இன உறவு - மட்டுநேசன்

காவிகளின் அரசியலுக்குப் பலியான தமிழ் - முஸ்லிம் இன உறவு - மட்டுநேசன்

எல்லாப் புகழும் இறைவனுக்கே- உயரிய விருதான ஒஸ்காரைப் பெற்றபோது இந்தியஇசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் உச்சரித்த வார்த்தைகள் இவை. இந்தியாவிலுள்ளஅனைத்து மொழி மக்களும் பூரிப்பால் திளைத்த அந்தத் தருணத்தில் தன்னை ஓர்இஸ்லாமியனாகவும் மொழியால் தமிழனாகவும் இனங்காட்டினார் அவர். இதெல்லாம்திட்டமிட்டுச் செய்வதல்ல. அந்த நேர உணர்வு: இறை உணர்வும் மொழி உணர்வும் இயல்பாகவந்த தருணம்.

ஒப்புக்குப் போர்த்திய அமைதித் திரையின் ஓரங்கள் பற்றி எரிகின்றனமற்றும் கானம் இரத்தகானம்முதலான பாடல்களை எழுதிய இன்குலாப் தனது கவிதைகள் மூலமும் வாழ்க்கை முறைவழியாகவும் தமிழினப் பற்றை வெளிப்படுத்தியவர். உயரிய விருதான சாகித்ய அக்கடமிவிருதையே நிராகரித்தவர். (திருப்பி அனுப்பியவர்) கவி அரங்கெனில் முதலில் குறிப்பிடப்படும்பெயர் அப்துல் ரகுமானாக இருந்தது. அவரது சுட்டுவிரல் கவிதைத் தொகுதி சென்னை மற்றும்மதுரை முதலான பல்கலைக்கழகங்களில் எம்.ஏ. பட்டப்படிப்புக்கான பாடப் புத்தகமாகஅங்கீகரிக்கப்பட்டிருந்தது. அதில் இரு கவிதைகள் ஈழப் போராட்டம் பற்றியவை.காலதாமதமாக ஆட்சியாளருக்கு இவ்விடயம் தெரியவந்தது. இந்த இரு கவிதைகளையும்இந்நூலில் இருந்து விலக்கி விட்டால் தொடர்ந்து பாடப் புத்தகமாக அங்கீகரிப்போம் எனஅவருக்கு அறிவுறுத்தப்பட்டது.

அவ்வாறான ஒரு நிலைப்பாட்டை நான் எடுக்க மாட்டேன்என உறுதியாகச் சொன்னார் அப்துல் ரகுமான்.பல இலட்சக்கணக்கான ரூபாய் வருமானம் வரக்கூடிய வாய்ப்பு இருந்தும் கொள்கையேபெரிதென நின்றவர் அவர். வித்துவச் செருக்கு இல்லாதவன் மனிதனே அல்ல என்பது கவிஞர்வாலியின் கருத்து (நானும் இந்த நூற்றாண்டும்). அப்துல் ரகுமானுக்கு வித்துவச் செருக்குடன்ஈழப் போராட்டம் பற்றிய நேசிப்பும் இருந்தது. மு.மேத்தாவின் கவிநயமும் இலக்கியப்படைப்பில் தனித்துவமானது. மறைந்த நீதியரசர் மு.மு.இஸ்மாயில் கம்பராமாயணத்தின்பெருமையை எழுத்தின் மூலமும் பேச்சின் வழியாகவும் வெளிப்படுத்தியவர். தற்போது பிரபலபேச்சாளராகத் திகழும் பர்வீன் சுல்தானா தனது பேச்சின் இடையே கம்பராமாயணத்தின் சிலபகுதிகளைச் சுட்டிக் காட்டுவதுண்டு. இலங்கையில் மட்டக்களப்பு, மலையகம், யாழ்., மன்னார்போன்று தமிழகத்திலும் பல பேச்சு வழக்குகள் உள்ளன.

பிரமாணத் தமிழ் மற்றும் சென்னை,கோவை, மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி போலவே கீழைக்கரை முஸ்லிம் மக்களின் பேச்சுவழக்கில் வடக்கில்தோப்பில் முஹமது மீரான் எழுதி வந்தார். இவரது ஒரு கிராமத்தின் கதைஇந்தியாவில் இருந்துஇலங்கைக்கு வந்த முஸ்லிம்களைப் பற்றியது.நான்காவது உலகத் தமிழராட்சி மாநாட்டு படுகொலைகள் ஆரம்பிக்கையில் பேராசிரியர்நைனா முஹமதுவின் உரையைக் கேட்டு இன்புற்றுக் கொண்டிருந்தனர் தமிழர்கள்.

இலங்கையைப் பொறுத்தவரை முத்து மீரானும் மசூர் மௌலானவும் தமது உரைகள் மூலம்தமிழ்த் தேசியத்துக்கு உரமூட்டியவர்கள். வேதாந்தி என்ற புனைபெயரில் எழுதி வந்த சேகுஇஸ்ஸதீன் என்பவர் நாகேஸ்வரி கணபதிப்பிள்ளையைத் திருமணம் செய்துகொண்டார்.

கவிதா என்ற புனைபெயரில் எழுதி வந்த நாகேஸ்வரியின் யுகங்கள் கணக்கல்லஎன்றசிறுகதைத் தொகுதி தமிழ் வாசகப் பரப்பில் பரவலாகப் பேசப்பட்டது. கல்முனையைப்பொறுத்தவரை முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகர் அஷ்ரப் மற்றும் மருதூர் கனி போன்றோர்குறிப்பிடத்தக்க கவிஞர்களாக இனங்காணப்பட்டவர்கள்.முதல் தமிழ் நாவலை எழுதியவர் அறிஞர் சித்திலெப்பை. அசன்பே சரித்திரம் என்பது

இந்நாவலுக்குப் பெயர். இவருக்கு தபால் தலை வெளியிட்டு கௌரவித்தது இலங்கை அரசு.இந்நாவலை அண்மையில் மறுபதிப்பு செய்துள்ளார் பேராசிரியர் நுஃமான். யாழ். நூலகஎரிப்புப் பற்றிய புத்தரின்....................என்ற கவிதையும் பரவலாகப் பேசப்பட்டது. இளங்கீரன்என்ற பெயரில் எழுதிய சுபைர் வாசகப் பரப்பில் தாக்கத்தை ஏற்படுத்தியவர். இவர் எழுதியநாவல் ஒன்று தினகரனில் நாளாந்தம் தொடராக வெளிவந்தது. அதில் குறிப்பிட்ட பெண்கதாபாத்திரத்தின் பெயரைக் குறிப்பிட்டு, அவள் சாகக்கூடாது என தினகரனுக்கு ஏராளமானதந்திகள் சென்றன. கதை முடியப் போகிறது என வாசகர்கள் உணர்ந்ததனால் இவ்வாறாகத்தந்திகள் அனுப்பினர்.

சங்கிலியன், பண்டாரவன்னியன், நபிகள் நாயகம் தலைப்புகளில் காவியங்கள் எழுதியவர்கவிக்கோ ஜின்னா ஷெரிபுதீன். இவர் இறுதியாக எழுதியது எல்லாளன் காவியம். இவரதுதந்தை ஆ.மு.ஷெரிபுதீன் பெருங் கவிக்கோ எனப் போற்றப்பட்டவர். நாகூர் இ.எம்.ஹனிபாஇஸ்லாமியப் பாடல்களால் மட்டுமல்ல தி.மு.கவின் பாடல்களாலும் அறியப்பட்டவர். அப்துல்மஜித் என்பவர் அறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணியில் ஆஸ்தான வித்துவானாகவிளங்கினார். மற்றொரு நாதஸ்வர வித்துவான் ஷேக் சின்ன மௌலானா பல்வேறு இந்துக்கோயில்களில் மட்டுமல்ல ஆடிவேல் உற்சவத்திலும் நாதஸ்வர இசையை வழங்கியவர்.

உலகப் பரப்பெங்கும் தமிழ் அறிவிப்பாளராக கொண்டாப்படுவர் ஏ.எச்.அப்துல் ஹமித். இவர்மணம் செய்தது ஒரு பிரமாணப் பெண்ணை. மிகுந்த ஞாபகசக்தி மிக்கவர் அப்துல் ஹமித்.அதனைப் பொருத்தமான நேரத்தில் பயன்படுத்துவதிலும் வல்லவர். இளையராஜாவை மட்டம்

தட்டுவதற்காக ஓரம்போ போன்ற பாடல்கள் காலத்தால் நிலைக்கமாட்டா எனக் குறிப்பிட்டார்பிரபல பாடகர் ரி.எம். சௌந்தர்ராஜன். அப்படியானால் ஹிஞ்சினாக்கடி ஹிஞ்சினாக்கடி...பாடல்கள் (ரி.எம்.எஸ் பாடியது) பற்றி என்ன நினைக்கிறீர்கள் எனக் கேட்டதன் மூலம்மறைமுகமாக ரி.எம்.எஸ்ஸின் மமதையை அவருக்குச் சுட்டிக்காட்டியவர் இவர்.

நாம் தமிழர்கள் அல்ல அரபுத் தமிழ் பேசுபவர்கள் என்கிறார் முன்னாள் அமைச்சர் அதாவுல்லா.அடப்பாவி மவனே அப்துல் ஹமித் கதைப்பதும் அரபுத் தமிழா?முன்னர் காத்தான்குடி - ஆரையம்பதி எல்லையில் பீத் தமிழனை பீரங்கி கொண்டு அழிப்போம்என்று எழுதியிருந்தமை ஒரிஜினல் தமிழா? அரபுத் தமிழா?இன்னொருவர் முன்னாள் அமைச்சர், ஆளுநர் ஹிஸ்புல்லா. இவர் கிழக்கு மாகாணத்தில்முஸ்லிம்களே பெரும்பான்மையினர். இங்கு ஒரு முஸ்லிமே முதலமைச்சராக வேண்டும்என்கிறார். இது நியாயமான கோரிக்கை. அடுத்துவரும் கருத்துக்கள்தான் விஷமத்தனமானவை.

கிழக்கில் ஒரு முஸ்லிம் முதலமைச்சரானால் வட,கிழக்கு தமிழர்களின் தாயகம் என்றகோரிக்கை அடிபட்டுப் போகும் என்கிறார். உண்மை என்னவெனில் அறவழியில்போராடியோரும் ஆயுதம் தாங்கியோரும் வட,கிழக்கு தமிழ் பேசும் மக்களின் தாயகம் என்றேகுறிப்பிட்டனர். பேசும் என்ற சொல்லை அகற்றி இக்கோரிக்கையை வைப்பவர்களைமுஸ்லிம்களுக்கு எதிரானவர்களாகக் காட்ட முனைந்தார் ஹிஸ்புல்லா.

முஸ்லிம்கள் கிழக்கு மாகாணத்தில் பெரும்பான்மையினர்தான். அண்மைய கணக்கெடுப்புஒன்றின்படி அம்பாறையில் 2 இலட்சத்து 42 ஆயிரத்து 484 பேரும் (43.6 வீதம்), திருமலையில்ஒரு இலட்சத்து 52 ஆயிரத்து 854 பேரும் (40.4 வீதம்) உள்ளனர். மட்டக்களப்பு மாவட்டத்தில்மட்டுமே தமிழர் பெரும்பன்மையினர். கிழக்கில் முஸ்லிம் முதலமைச்சர் வேண்டும் என்போர்முஸ்லிம்கள் பெரும்பான்மையினராக உள்ள மாவட்டங்களான அம்பாறை மற்றும் திருமலைக்குஇந்த அரபுத் தமிழைப் பேசுபவரை அரசாங்க அதிபராக நியமிக்க வேண்டும் என ஏன்கோரவில்லை?

யாழ்ப்பாணத்தில் லயனல் பெர்னாண்டோ (1980) இற்குப் பின்னர் தொடர்ச்சியாக தமிழர்களேஅரசாங்க அதிபர்களாக விளங்குகின்றனர். மட்டக்களப்பு, கிளிநொச்சி, முல்லைத்தீவுமாவட்டங்களிலும் இதே நிலைமைதான். கல்முனை தமிழ்ப் பிரிவு உதவி அரச அதிபர்பணிமனையை தரமுயர்த்த வேண்டாம் எனக் கோருவதை விட மாவட்டத்துக்கே முஸ்லிம் அரசஅதிபர் வேண்டும் எனக் கோருவதிலேயே நியாயமும் உரிமையும் உண்டு. அப்படிக் கோரத்துணிவு இல்லாத ஹிஸ்புல்லா, அதாவுல்லா, ஹாரீஷ், ஷிப்ரி பாரூக் போன்றோர் தமிழருக்குஎதிராக வரிந்து கட்டிக் கொண்டு வருவதில் நியாயமில்லை. தங்களுடைய பயத்தை மறைத்துதமிழருக்கு எதிரான இனவாதத்தைக் கக்குவது புனித குர்ஆன் சொல்லும் தத்துவங்களுக்குமாறானதல்லவா?நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறனுமின்றி வஞ்சனை சொல்வாரடி - கிளியே வாய்ச்சொல்லில் வீரரடி... , என்ற பாரதியின் பாடல் வரிகள்தான் நினைவுக்கு வருகின்றன.

அம்பாறை பட்டிப்பளையில் அரச மரக் கன்று ஒன்றை நாட்டிய அப்போதைய பிரதமர்டி.எஸ்.சேனநாயக்க, இந்த மரம் வளர்ந்து பெரு விருட்சமாகும்போது இங்கு உங்களைத் தவிரவேறு யாரும் இருக்கக்கூடாது என குடியேற்றப்பட்ட சிங்களவர்கள் மத்தியில்உரையாற்றினார்.

புனிதபூமி திட்டத்திற்கு விகாரையின் மணியோசை கேட்கும் நிலமெல்லாம் பௌத்தர்களுக்குசொந்தம் என்ற நிலைப்பாட்டை சிங்களம் கைவிட்டிருக்கும் என்று தோன்றவில்லை. இந்தநிலையில் அம்பாறை, திருமலைக்கு அரபுத் தமிழ் பேசுபவர்களே அரச அதிபர்களாக வேண்டும்என முணுமுணுத்தால் நிலைமை என்னவாகும் என்பது இந்தப் பிரமுகர்களுக்குத்தெரியாததல்ல. உண்மையில், கல்முனைப் போராட்டங்களை நடத்திய இரு பகுதியினரதும்பொம்மலாட்ட நூல் மஹிந்தவின் கையிலேயே இருந்தது. இரு பகுதியிலும் மஹிந்தவின்விசுவாசிகளே தலைமை தாங்கினர்.

ஒருபுறம் அதாவுல்லா போன்றோர். மறுபக்கம் மஹிந்தவின் சில நாள் அமைச்சரவையில்இடம்பெற்ற (பிரதியமைச்சர்) வியாழேந்திரன், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உபதலைவராகவிளங்கியவரும் முன்னாள் தேசிய நல்லிணக்க அமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன்,இனியபாரதி மற்றும் பிள்ளையானின் ஆதரவாளர் குழாமின் கையே ஓங்கியிருந்தது.

இவர்களுடன் வட மாகாண முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் தவராசாவும்இணைந்துகொண்டார்.நல்லவேளை ஞானசார தேரரின் தலைமையில் இந்த உண்ணாநோன்பு முடிக்கப்பட்டது.இல்லையேல் கருணாநிதி போல விநாயகமூர்த்தி முரளிதரனும் போராட்ட களத்தில்குதித்திருப்பார்.

அவரது தலைமாட்டில் ஒன்று கால்மாட்டில் மற்றொன்று என நின்று தமிழரின் போராட்டமேசந்தி சிரிக்கும் நிலைக்குப் போயிருக்கும்.

ஆயுதப் போராட்டத்தை முறியடிக்கத் துணை போன அவரால், மஹிந்த மூலம்இக்கோரிக்கையைச் சாத்தியமாக்கியிருக்க முடியாதா? அப்போது கேட்டிருந்தால் அல்லதுதனது செயலாளரிடம் தனக்கு நினைவூட்டும்படி கூறியிருந்தால் இது ஊதித் தள்ளும் அளவுக்குஇலகுவாக இருந்திருக்கும் அல்லவா?இன்று சட்டியில் இருந்து அடுப்புக்குள் வீழ்ந்த கதையாகி விட்டதே. பிக்குகளின் வேண்டுகோள்என்பதை விட உத்தரவின் பேரில் இடைநிறுத்தப்பட்டது போராட்டம் என்று வெளிவந்தசெய்திகளை முழுமையாக நிராகரிக்க முடியுமா? தமிழரின் சாத்வீகப் போராட்டங்கள் காலிமுகத்திடலில் காடையர்களாலும் யாழ். கச்சேரியில் காக்கியினராலும் முறியடிக்கப்பட்டன.

கல்முனையிலோ காவியுடைக்காரர்களால் முடித்து வைக்கப்பட்டது.கிழக்கின் அண்மைக்கால வரலாற்றில் பிக்குகள் செய்த அடாவடிகளை மறக்க முடியுமா?இவர்களுக்கு எதிராக எதுவும் செய்ய முடியாமல் பார்வையாளராகவே பொலிஸார் நின்றசம்பவங்களைப் பட்டியல் போட முடியும். தமது நோக்கத்தை ஞானசார தேரர் கடந்த 23 ஆம்திகதி நீர்கொழும்பு கட்டுப்பிட்டிய புனித செபஸ்தியார் ஆலயத்தில் ஊடகங்களுக்குவெளிப்படுத்தினார், தனிச் சிங்கள அரசை நிர்மாணிப்பதற்கு நாம் முயற்சி செய்ய வேண்டும்.

நமக்கு ஆதரவு வழங்கும் கத்தோலிக்கத் தமிழர், முஸ்லிம்களை இணைத்துக் கொண்டுபயணிக்க வேண்டும்., என்பதே அவரது கருத்து. இதிலிருந்து அவர் கல்முனைக்கு விஜயம்செய்ததன் நோக்கத்தைப் புரிந்து கொள்ளலாம்.

நாடாளுமன்றத்தில் உயர்த்திய கைகளை கீழிறக்க முடியவில்லை கூட்டமைப்பினரால். வரவு -செலவுத் திட்டங்கள், ரணிலுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை, அவசரகாலப்பிரகடனம் போன்றவற்றில் ஐ.தே.க. என்ன நிலைப்பாடு எடுக்கிறதோ அதுதான்கூட்டமைப்பினதும். எஜமான் படத்தில், கல்யாணம்னா நான்தான் மாப்பிள்ளை:சாவுவீடுன்னா நான்தான் பிணம் என்பார் நெப்போலியன். அதே பாணியில் அரசியல் நடத்துகிறார்சுமந்திரன், நாங்கள் சில நிபந்தனைகளின் அடிப்படையிலேயே அரசுக்கு ஆதரவு அளிப்போம்என ஒரு தடவை சொன்னார் சிறிதரன்.

ஆனால் நாம் ஆதரவளிக்க எந்த நிபந்தனையையும்விதிக்கவில்லை என்று மறுத்தான் கொடுத்தார் சுமந்திரன். சாப்பிட மட்டுமே வாயைத் திறஎன்பதுதான் அவர் சிறிதரனுக்குச் சொன்ன செய்தியின் சாரம். சிறிதரன் சொன்ன விடயங்களில்அரசியல் கைதிகளின் விடுதலையும் அடங்கும். அந்த விடயங்களை முழுமையாக சுமந்திரனேகையாண்டார். 19 வருடங்களாக சிறையில் இருந்த முத்தையா சகாதேவன் (வயது 61) ஒரு சிலதினங்களுக்கு முன்னர் காலமானார்.

அரசியல் கைதிகளின் விடயத்தில் ஒரு துரும்பைக்கூடஅசைக்க முடியவில்லை. அக்காலகட்டங்களில் கல்முனை விவகாரத்தையேனும் சாத்தியமாக்கிஇருக்கலாம் அல்லவா? உண்மையில் கட்சிக்குப் பின்னால் மக்கள் என்பதைவிட மக்களுக்குப்பின்னால் தாம் நிற்கிறோம் என்று காட்டவே நிற்கிறது கூட்டமைப்பு. இரணைதீவு,கேப்பாபிலவு போன்ற போராட்டங்களின் வரிசையில் மக்களுக்குப் பின் நிற்க முயன்றுகல்முனையில் அவமானப்பட்டது.

ஜெனிவாவில் அரசுக்கு கால அவகாசம் பெற்றுக் கொடுக்க எடுத்த முயற்சிகளின்போதுகூடபேரம் என்பதே நடக்கவில்லை. அரசுடன்தான் என்றில்லை முஸ்லிம் காங்கிரஸூடன்கூடஅப்படித்தான். கிழக்கு மாகாண சபைக்கு முஸ்லிமை முதல்வராக்கியமை காலத்தின்தேவைதான். ஆனால் தமிழர் தரப்புக்கு நன்மையளிக்கும் இலக்கில் கல்முனை விவகாரம்,இனப்படுகொலை தீர்மானத்தை சபையில் நிறைவேற்றுவது என்று மு.காவுடன் ஏன் பேரம்பேசவில்லை.

மாறாக இனப்படுகொலை என்ற தீர்மானத்தை கொண்டுவந்ததற்காக வடக்குமுதல்வரை எப்படியெல்லாம் அவமானப்படுத்தினர் சுமந்திரனும் அவரது தொண்டரடிப்பொடியாழ்வார்களும். உண்மையில் தந்தை செல்வா காலத்திலும், பிரபாகரன் காலத்திலும்தான்எதைப் பெற்றுக் கொள்வது என்று பேச்சுக்கள் நடந்தன. மீதி எல்லாக் காலத்திலும் எதைவிட்டுக் கொடுப்பது என்றே பேச்சுக்கள் நடந்தனஃ நடக்கின்றன. இந்த மக்கள் மத்தியில்வாழாத போராட்டத்தின் வலி தெரியாத சுமந்திரன் போன்றோர் தலைப்பாகை கட்டிநிற்பதால்தான் கல்முனையில் அவமானப்பட நேர்ந்தது.

கல்முனை விவகாரம் திசை திரும்பி விட்டது என்ற யதார்த்தத்தை தமிழர்களும் முஸ்லிம்களும்ஏற்றுக் கொள்ள வேண்டும். சுனாமியில் உயிரிழந்து கரையொதுங்கிய பெண்களின்சடலங்களை மிகக் கௌரவமான முறையில் முஸ்லிம் இளைஞர்கள் தமிழர்களிடம்ஒப்படைத்தனர் என்றும் சடலங்களில் இருந்த நகைகள் அப்படியே காணப்பட்டன எனவும்திருக்கோவிலைச் சேர்ந்த ஆனந்த போடியார் குறிப்பிட்டமை மறக்க முடியாத விடயம்.

இனவுணர்வுக்காக இன்னொரு சுனாமியை எதிர்பார்க்காமல் இரு பகுதியினரும் தாமாகயோசித்து தீர்வு காண வேண்டும். அரபுத் தமிழ் போன்ற கோமாளிக் கருத்துக்கள் தூக்கிஎறியப்படட்டும். தமிழ் பேசும் மக்கள் என்ற உணர்வு மேலோங்கட்டும்.

மாவீரர்கள்