Sanskathi
Jul 10

கனேடியருக்கு நேபாளத்தில் 9 ஆண்டுகள் சிறைத் தண்டனை

கனேடியருக்கு நேபாளத்தில் 9 ஆண்டுகள் சிறைத் தண்டனை

தன்னார்வத் தொண்டூழியராக நேபாளத்தில் பணியாற்றிய கனேடியர் ஒருவருக்கு, அங்குள்ள இரண்டு சிறுவர்களை துஸ்பிரயோகம் செய்ததான குற்றச்சாட்டில் ஒன்பது ஆண்டுகள் சிறைத்தண்டனை அந்த நாட்டு நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டுள்ளது.

அவரது வீட்டில் இருந்த இரண்டு சிறுவர்களை பாலியல் ரீதியாக துஸ்பிரயோகம் செய்ததாக கடந்த ஆண்டில் கைது செய்யப்பட்ட பீட்டர் டல்களிஷ் எனப்படும் அந்த கனேடியருக்கு, திங்கட்கிழமை இந்தத் தண்டனையை நீதிபதி அறிவித்துள்ளார்.

அவருக்கு ஒன்பது ஆண்டுகள் மற்றும் ஏழு ஆண்டுகள் என்று இரண்டு தண்டனை வழங்கப்பட்டாலும், இரண்டையும் இணைத்து அவர் மொத்தம் ஒன்பது ஆண்டுகளுக்கு சிறையில் கழிக்கும் வகையில் இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக இது குறித்து நேற்று கருத்து வெளியிட்ட அங்குள்ள கவ்ரே மாவட்ட நீதிமன்ற அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்தக் குற்றச் செயல்கள் இடம்பெற்ற காலப்பகுதியில் 12 மற்றும் 14 வயதுடையவர்களாக இருந்த அந்த இரண்டு சிறுவர்களுக்கும் ஆளுக்கு தலா ஐந்து இலட்சம் ரூபாக்களை அதாவது 4,500 டொலர்களை நட்டஈடாக வழங்குமாறும் அவருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கனேடியரான பீட்டர் டல்களிஷ் கடந்த 2018ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மாவீரர்கள்