Sanskathi
Jul 11

புதிய தேசிய கூட்டணி தேர்தலை இலக்குவைத்து உருவாக்கப்படவில்லை-பிரபா கணேசன்

புதிய தேசிய கூட்டணி தேர்தலை இலக்குவைத்து உருவாக்கப்படவில்லை-பிரபா கணேசன்

புதிய தேசிய கூட்டணி தேர்தலை இலக்குவைத்து உருவாக்கப்படவில்லையென ஜனநாயக மக்கள் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான பிரபா கணேசன் தெரிவித்தார்.

மலையகம், வடக்கு மற்றும் மேல் மாகாணம் அடங்களாக புதிய தேசிய கூட்டணியின் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இங்கு மேலும் தெரிவித்த அவர், “தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை பூர்த்தி செய்யும் நோக்கிலேயே புதிய அரசியல் கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது. இது மக்களுக்கான கூட்டணியே தவிர தேர்தலை இலக்கு வைத்து உருவாக்கப்பட்டதொன்றல்ல.

ஆரம்பகட்டமாகவே இன்று சில கட்சிகள் இணைந்தன. எதிர்காலத்தில் வடக்கிலும் கிழக்கிலும் மேலும் பலர் இணையக்கூடும். மலையகம் மட்டுமல்ல வடக்கு, கிழக்கிலும் அரசியல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும்” என மேலும் தெரிவித்தார்.

மாவீரர்கள்