Sanskathi
Jul 11

தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க மாட்டோம் - சரவணபவன்

தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க மாட்டோம் - சரவணபவன்

பிரதமர் ரணிலும் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்தவும் தமிழ் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் அதன்பின்னர் அவர்களுக்கு ஆதரவு வழங்குவதா இல்லையா என தீர்மானிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாதத் தீர்மானம் தொடர்பாக தற்போது நாடாளுமன்றத்தில் நடைபெற்றுவரும் விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் “எந்த சிங்கள பெரும்பான்மை அரசு ஆட்சிக்கு வந்தாலும் தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினை தீர்க்கப்படுவதில்லை.

குறிப்பாக இந்த நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததென பின்னர், பிரதமர் பல்வேறு தடவைகள் தமிழருக்கான தீர்வு கிடைக்கும் என வாக்குறுதியை வழங்கியிருந்தார்.

ஆனால் அவை 4 வருடங்கள் நிறைவடைந்ததும் தீர்க்கப்படவில்லை. எனவே தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக இதனை நாம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க மாட்டோம்.” என கூறினார்.

மாவீரர்கள்