Sanskathi
Jan 08

மார்க்கம் மாநகர படமாளிகை மண்டபத்தில் கலை நிகழ்ச்சிகளுடன் கூடிய பொங்கல் விழா!

மார்க்கம் மாநகர சபையில் வருடா வருடம் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வரும் பொங்கல் விழா எதிர்வரும்14ம் திகதி பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை கலை நிகழ்ச்சிகள் சகிதம்ரூ  மாநகர சபையின்படமாளிகையில் மாபெரும் விழாவாகக் கொண்டாடப்பட விருக்கிறது. தமிழ் இனத்தின் பாரம்பரிய கலைரூபவ்கலாச்சாரத்துடன் கொண்டாடப்பட விருக்கும் இவ்விழாவில் எண்பதுக்கும் மேற்பட்ட இளைஞர்களும்ரூ  முதியோர்களும்பல்வேறு கலை நிகழ்ச்சிகளை வழங்கி பார்வையாளர்களை மகிழ்விக்க உள்ளனர்.

கட்டணம் எதுவுமே இன்றி இலவசமாகவழங்க்கப்ப டும் இந்நிகழ்ச்சிகளை கண்டு களிக்க திரண்டு வருமாறு மாநகர சபையின் முதலாவது தமிழ் அங்கத்தவர்என்ற பெருமைக்குரிய திரு.லோகன் கணபதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மார்க்கம் மாநகர சபையின் மூலம் 2012ம் ஆண்டு திரு.லோகன் கணபதி அவர்கள் முதன் முறை யாக தமிழர் தம்பாரம்பரிய பண்டிகையான பொங்கல் தினத்தை தமிழர் திருநாளாகப் பிரகடனப் படுத்தி  மார்க்கம் மாநகர சபைமண்டபத்தின் கீழ் மாடியில் பொங்கலும் பொங்கி கொண்டாடிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தநிகழ்ச்சியினை கனடா வாழ் தமிழ் மக்கள் மறநது விட முடி யாது. அன்று முதல் தொடர்ந்து வருடா வருடம் பொங்கல்விழா கொண்டாடப்பட்டு வருகின்றது. “தமிழர் பண்பாட்டு மரபியல் மன்றமும்” பொங்கல் விழாக் குழுவும்இணைந்து இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றன.

எமது பாரம்பரிய கலை  கலாச்சாரங்களை பேணிவளர்த்து நமது அடுத்த தலைமுறையினரிடம் கையளிக்கும் வகையில் இவ்விழா நடாத்தப்பட்டு வருவதை யாவரும்அறிவீர்கள். காலத்துக்கு காலம் இந்தியாவிலிருந்து தமிழ் ஓவியர்களைஅழைத்து ஓவியக் கண்காட்சிகளை யும் திரு.லோகன் கணபதி நடாத்தி வருவதை யாவரும் அறிவீர்கள்.

அத்தோடுநின்று விடாது மார்க்கம் மாநகரிலுள்ள பல வீதிகளுக்கு அவர் தமிழ் பெயர்களையும் சூட்டி உள்ளமை வரலா ற்றுமுக்கியத்துவம் வாய்ந்த செயலாகும்.

அண்மையில் கூட மார்க்கம் மாநகரில் 14வது அவெ னியூ மிடில்பீல்ட்வீதி சந்திக்கு அருகாமையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பொழுது போக்கு நிலையத்துக்குச் செல்லும் சிறுவீதிக்கும் “யாழ் வீதி” எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளமையும் குறிப்பிட்தக்கதாகும்.

(வீரகேசரி மூர்த்தி)

மாவீரர்கள்