Sanskathi
Jan 08

உலகக் கிண்ண கிரிக்கெட்போட்டி

2018 தை 14 இம்மாதம் நியுசிலாந்தில் நடைபெற இருக்கின்ற 19 வயதுக்குட்பட்டவருக்கான உலகக் கிண்ண கிரிக்கெட்போட்டியில் கனடா அணியில் 3 ஈழத்தமிழர்கள் விளையாடி உலகத்தமிழர்களுக்கெல்லாம் பெருமை சேர்த்துள்ளார்கள். காவியன் நரேஸ் .சாமுவேல் கிரிசான் .மற்றும் ஏரன் பத்மநாதன் ஆகிய வீரர்களால் பெருமை அடைகிறது உலகத்தமிழினம்.

இதில் காவியன் நரேஸ் சிறந்த துடுப்பாட்ட வீரனாகவும் சுழல் பந்து வீச்சாளராகவும்  சாமுவேல் கிரிசான் விக்கெட் காப்பாளராகவும் ஏரன் பத்மநாதன் சிறந்த சுழல் பந்து வீச்சாளராகவும்  கனடா அணிக்கு பலம் சேர்க்கிறார்கள்.

முதல் கட்டமாக கனடா அணியோடு இங்கிலாந்து பங்காளதேசம் மற்றும் நமிபியா அணிகள் போதுகின்றன.

இலங்கை இந்திய போன்ற இலட்சக்கணக்கில் தமிழர்கள் வாழும் தேசங்களில் இருந்து ஓரு தமிழ் வீரரும் உலகக்கோப்பை போட்டியில் விளையாடாத போதிலும் கனடா அணியில் 3 தமிழ் வீரர்கள் வளையாடுவதென்பது நமக்கெல்லாம் இனிப்பான செய்தியாகும் .

இவர்கள் தங்கள் திறமையால் கனடாவுக்கும் தமிழருக்கும் பெருமை சேர்த்திட வாழ்த்துவோம்

மாவீரர்கள்