Sanskathi
Jan 13

தைத்திருநாள் நிகழ்வு

தைத்திருநாள், தைப்பொங்கல் விழா, தமிழ் புத்தாண்டு நிகழ்வுகள் மெல்பேர்ண் வாழ்  தமிழ் மக்களால் வெவ்வேறு இடங்களில், எதிர்வரும் 2 வார இறுதியில் நாடு மற்றும் சமய வேறுபாடுகளை கடந்து மிகவும் உணர்வுபூர்வமாகவும், உற்சாகத்துடனும்  கொண்டாடப்படவுள்ளது. தமிழர்கள் அனைவரையும் இந்நிகழ்வுகளை ஓழுங்குபடுத்தும் தமிழ் அமைப்புக்களின் சார்பில், எமது தமிழ் கலாச்சார நிகழ்வுகளிலும் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம். 

அனைத்து தமிழ் உறவுகளுக்கும் வணக்கம்

எதிர்வரும் 14_01_2018 ஞாயிற்றுக்கிழமையன்று தமிழர திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகை தமிழ் ஏதிலிகள் கழகத்தினரால் மிகவும் எழுச்சிபூர்வமாக கொண்டாடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. 

கீழ்க்குறிப்பிடப்படும் முகவரியில் அன்றையதினம் காலை 9.00மணிமுதல் 11.00 மணி வரையும் இந்த பொங்கல்விழா நடைபெறும். எனவே அனைத்து மக்களும் வருகைதந்து எமது பொங்கல் விழாவில் கலந்து பொங்கல் உண்டு இவ்விழாவை சிறப்பிக்கமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

Thai Pongal Celebration by Tamil Refugee Council on 9AM Sunday 14th January 2018

Venue: Park behind Dandenong Stadium, 270 Stud Road, Dandenong North 3175

For more Informations, Please Contact: ‎0410 197 814

தமிழர்கள் அனைவரையும் இந்நிகழ்வுகளை ஓழுங்குபடுத்தும் தமிழ் அமைப்புக்களின் சார்பில், எமது தமிழ் கலாச்சார நிகழ்வுகளிலும் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம். 

எம் தமிழர்களின் மிகமுக்கியமான விழாவான தைப்பொங்கலின் சிறப்புக்களை எம் இளையதலைமுறைக்கு எடுத்துக்காட்டவும், இந்த நாட்டு தமிழ் உறவுகளின் கலாச்சார, கலைச் செழிப்பைக் காட்டும் இனிய பல கலை நிகழ்வுகளையும், எமது பாரம்பரிய விளையாட்டுக்களையும் கண்டுகளிக்கவும் இந்தவிழாக்களுக்கு, தமிழ் கலாச்சார உடையில் வந்து கலந்து சிறப்பூட்ட வேண்டுமென அன்புடன் வேண்டுகின்றோம்.

அன்பான மெல்பேன் வாழ் தமிழ் மக்களே,

விக்டோரியா தமிழ் கலாச்சார கழகத்தின் தைத்திருநாள் தைப்பொங்கல் விழா ஜனவரி 1​3ம்  திகதி மாலை 5.30 மணிக்கு ​ஸ்பிரிங்வேல் நகர மண்டப அரங்கில் இடம் பெறவுள்ளன பல கலை நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன இந்நிகழ்வுக்கு உங்கள் எல்லோரையும்  வருகை தரும்படி அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்  

   எதிர்வரும் தைத்திங்கள் ​2​1ம்​ திகதி காலை 9.00 மணியிலிருந்து பிற்பகல் 4.00 மணிவரை கேசி தமிழ் மன்றத்தின் மாபெரும் தைப்பொங்கல் பெருவிழா Gaelic Park, Keysborough வில் நடைபெற இருக்கின்றது.

விக்டோரியா வாழ்  தமிழர்களின் பெரும் ஒன்றுகூடலாய் அமைகின்ற இவ்விழாவை, தமிழர்களின் சிறப்பான இருப்பை - எம் கலைவளத்தின் சிறப்பை எடுத்துக்காட்டுகின்ற, விக்டோரிய மாநிலத்தின் உன்னதனமான பல்கலாசார பெருவிழாவை மாற்றிட பல்துறை சார்ந்தவர்களின் பங்களிப்பை வேண்டி நிற்கின்றோம். 

இனிய தமிழ் குடும்பங்களை தம் தம் குடும்பத்தின் சார்பில் பொங்கல் பானையொன்றை கொண்டுவந்து எல்லோருடனும் இணைந்து பொங்கி மகிழ வரவேற்கின்றோம். அடுப்பு, விறகு  உட்பட்ட வசதிகள் எம்மால் செய்து தரப்படும்.

வணிக நண்பர்ககளை, துறைசார் வல்லுநர்களை, விழாவிற்கு அணி சேர்க்கும் வணிக அங்காடிகளில் அவர்களின் வியாபாரம் / சேவையை இடம்பெற்றிடச் செய்து எமக்கு கைகொடுக்க வேண்டுகின்றோம். வணிகம் / சேவை குறித்த தகவல் சமூகத்தைச் சென்றடைய நல்லதோர் சந்தர்ப்பம்! வெவ்வேறு அளவுகளில் அமைந்த அங்காடிகள் அவர்களின்  தெரிவிற்காய் காத்திருக்கின்றன!! 

கலையார்வம் மிக்க சிறுவர்கள் மற்றும் பெரியோர்கள் தம் திறமைகளை அரங்கேற்றுவதற்காய், திறந்தவெளி மேடையொன்று அமையவுள்ளது. தவறாது எல்லோரும் தம் நிகழ்வுகளால் அந்த மேடையை அலங்கரிக்க அழைக்கின்றோம். கிளித்தட்டு போன்ற பல பாரம்பரிய விளையாட்டு நிகழ்வுகளும் நடைபெற உள்ளன. அந்த நிகழ்வுகளில் பங்குபற்றி களிப்புற அனைவரையும் அழைக்கின்றோம்.

மேலதிக விபரங்களுக்கு பதிவுகளுக்கும் எம்மை விரைவாய் தொடர்புகொள்ள வேண்டுகின்றோம்.

Saththiyan

0403436970​

தமிழர் திருநாள் ஆகிய ”தைப்பொங்கல் விழா – 201​8 ​கடந்த வருடங்களைப்போல், இவ்வருடமும் “சுருதி லயா East West இசைக்கல்லூரியின்“ ஆதரவுடன் மெல்பேண் வாழ் வடபகுதி தமிழ் மக்கள் அனைவரும் ஒன்று கூடி நடாத்தும் தைப் பொங்கல் விழா – 2018​ ​கொண்டாடவுள்ளோம்.

தமிழர் தைத்திருநாள் பண்டிகையை கொணடாடுவதுடன், எமது இளம் தலைமுறையினருக்கு தமிழர் பாரம்பரிய கலை, கலாச்சாரங்களை விளக்குவதும் இதன் நொக்கமாகும், தைப்பொங்கல் பண்டிகை நிகழ்வாக திறந்த வெளிப்பூங்காவில் தமிழர் பாரம்பரிய முறையில் பொங்கலும், அதனைத் தொடர்ந்து தமிழர் பாரம்பரியவிளையாட்டுக்களும் நடைபெற இருக்கின்றது. இந்த பண்டிகையில் சிறியோர் முதல் பெரியோர் வரை, பங்குபற்றி விழாவினை சிறப்பிக்குமாறு பணிவன்புடன்அழைக்கின்றோம்.

காலம்:- ஞாயிற்றுக்கிழமை  ​21​.01.201​8​

நேரம்:​- காலை 09.00 மணி  - அனுமதி இலவசம்.

இடம்:- Norris Bank Parklands, 135. Mcleans Road. Bundoora.

இந்நிகழ்வில் அனைத்து தமிழ் அன்பர்களையும், தமிழர் பாரம்பரிய உடைகளுடன் சமூகம் தரும் வண்ணம் அன்போடு கேட்டுக் கொள்கின்றோம்.

உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் மனமார்ந்த நன்றிகள்.

அல்லமதேவன்

மாவீரர்கள்