Sanskathi
Apr 23

உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் நடாத்தும் உலக குழந்தைகள் இலக்கிய மாநாடு

உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் நடாத்தும் உலக குழந்தைகள் மாநாடு ஆனி 8ம், 9 ம்  10 ம்   திகதிகளில் மலேசியா கோலாலம்பூர்  நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகத்தமிழ்ப்பண்பாட்டு இயக்க ஜரோப்பிய ஒன்றிய தலைவர் சரவணையூர்  விசு செல்வராசா, பிரான்சு .உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கஅகில  செயலாளர் திரு.தருமன் தர்மகுலசிங்கம். டென்மார்க்.  உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்க அகிலத்  தலைவர் திரு .ப.கு. சண்முகம் .மலேசியா .  ஆகியோர் இணைந்து ஊடகங்களுக்கு அனுப்பி வைத்த அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளனர்.

அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட விபரங்கள்:

உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தினால் இந்த  ஆண்டு ஆனி  மாதம் 8 வெள்ளி  9 சனி  10,ஞாயிறு  ஆகிய  மூன்று தினங்களில் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் முதலாம் உலக தமிழ்க் குழந்தை இலக்கிய மாநாடு  வெகு சிறப்பாக நடைபெற உள்ளது.

உலகத்தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் மலேசியாவை  தலைமையகமாகக்கொண்டு செயற்பட்டு வருவதோடு உலகத்தமிழ் மக்களை ஒன்றிணைப்பதில் பெரும் வெற்றியும் கண்டுள்ளது.

இவ் இயக்கத்தின் கிளைகள் பல நாடுகளில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த இயக்கம் பல உலகத்தமிழ் மாநாடுகளை நடத்திய பெருமையோடு  வரலாற்று சிறப்பு மிக்க முதலாம் உலக தமிழ்க் குழந்தை இலக்கிய மாநாட்டை மலேசிய தலைநகர் கோலாலம்பூரில்  உள்ள மலாய் பல்கலைக்கழகத்தில் மலாய் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறையின் ஆதரவுடன்  நடாத்த ஏற்பாடுகள் செய்துள்ளது .

 இந்த மாநாடு உலகத்தமிழ்க் குழந்தை இலக்கிய வளர்ச்சியை அடிப்படையாக கொண்டே கூட்டப்படுகிறது .இந்த மாநாட்டில் வெளிப்படும் ஆய்வறிஞர்களின் கருத்தைக்கொண்டு அந்தந்த நாட்டுகேற்ப குழந்தை இலக்கிய வளர்ச்சியை மேற்கொள்ளவும் பன்னாட்டு அறிஞர்களின் சிந்தனையை பகிர்ந்து கொள்ளவும் குழந்தை இலக்கியத்துக்கான தூண்டுதல் பெறவும்  இந்த மாநாடு வழிவகுக்கும்.  அத்துடன் அடுத்த தலைமுறை இன உணர்வோடும் மொழிப்பற்றோடும் பண்பாட்டு விழுமியங்களோடும் வளர்ந்து உய்ய இந்த மாநாட்டின் மூலம் வழிகாணலாம் குழந்தை இலக்கியத்தைமாணவர்களுக்கு  கற்பிப்பதில் புது உத்திகளை கண்டறிய இந்த மாநாடு உதவும் .

இந்த மாநாட்டில் குழந்தைகள் பங்குகொள்ளும் இனிய கலை நிகழ்சிகளும் இடம் பெற இருகின்றது

உலகளாவிய தமிழர் சமூகத்தை மொழியாலும் பண்பாட்டாலும் ஒருங்கிணைக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்குடனும் உலக  நாடுகளில் தமிழர்கள் தலை நிமிர்ந்து வாழ வேண்டும் என்ற  உயர்ந்த குறிக்கோளுடனும் அரசியல் சார்பற்று இன மத பேதங்களைக் கடந்து தமிழ்ப் பண்பாட்டாளர் என்ற ஒரே குடையின் கீழ் செயற்ப்படுவதற்கும் தமிழ் மொழியை மறந்தவர்களை மொழி உணர்வாளர்களாக மாற்றும் நேர்த்தியான கொள்கைகளுடனும் 1974 ம் ஆண்டு தைத்திங்கள் 8ம் நாள் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் பல நாட்டு அறிஞர்கள் ஒன்றிணைந்து உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தை உருவாக்கினார்கள். எனவே இந்த இயக்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வரலாற்று சிறப்பு மிக்க இந்த மாநாட்டில் அனைவரையும்   கலந்து சிறப்பிக்குமாறு அந்த அறிக்கையில்  குறிப்பிடப்பட்டுள்ளது 


மாவீரர்கள்