Sanskathi
Jun 07

தமிழ் புனர்வாழ்வுக்கழகம் - பிரான்ஸ் (08-07-2018) நடாத்தும் விளையாட்டு விழா

தமிழர் புனர்வாழ்வுக்கழகம் ஆண்டு தோறும் நடாத்தி வரும் தமிழர் விளையாட்டு விழா 08.07.2018 லூ பூ சே திடலில் நடைபெற ஏற்பாடாகியுள்ளது.  இவ்விழா இருபது ஆண்டுகள் கடந்து இருபத்தியொராவது ஆண்டில் கால் பதிக்கின்றது.  இத்தனை ஆண்டுகள், கலை பண்பாட்டோடு விளையாட்டையும் தமிழர் உணவையும் ஒருங்கே கொண்டு அன்பையும் சகோதரத்துவத்தையும் மனிதநேயத்தையும் காவி பயணிப்பது எழிதான காரியமல்ல.  எத்தனையோ வலிகளையும் தாங்கி பல நூறு தொண்டர்களின் வியர்வையால் கட்டி வளர்க்கப்பட்டுள்ளது.  இந்நிகழ்வு இன்று பிரான்ஸ் வாழ் தமிழ் மக்களின் பண்பாட்டு அடையாளமாக பார்க்கப்படுகின்றது. எனவே அடுத்த தலைமுறையும் இவ்விழாவை கொண்டாட வேண்டும்.  ஆகவே எமது பாரம்பரிய விளையாட்டுத்துறைசார் வீரர்கள் தொண்டர்கள் என பலர் இணைந்து கொண்டால் இவ்விழா இன்னும் சிறப்பாக நடாத்த முடியும்.  

தாய் மண்நோக்கிய நிறுவனங்கள், சமூக சேவை நிறுவனங்கள், விளையாட்டுக் கழகங்கள் ஊர்ச்சங்கங்கள், கல்வி நிலையங்கள், சமய மத பீடங்கள் அனைத்தும் எமது சமூகத்தின் நன்மைக்காக ஏதோ ஒரு வகையில் பணியாற்றுகின்றன.  எனவே இந்நிறுவனங்கள் அதன்   உறுப்பினர்களுடன் இணைந்து பணியாற்ற வருமாறு அன்போடும் உரிமையோடும் அழைக்கின்றோம்.  

எமது நோக்கம் தமிழினத்தின் உயர்வும் வளர்ச்சியும் இருப்பும்; சுதந்திர வாழ்வுமே அன்றி வேறோன்றுமில்லை.  அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு என்பார்கள் எம் முன்னோர்கள்.  அந்த வகையில் ஒன்றாய் திரண்டு பலமாய் நிமிர்ந்து தாய் நிலத்தில் நல்லதோர் பாலம் செய்வோம் வாருங்கள். 

ஒன்றிணைவோம் சேவை செய்வோம்

தமிழர் புனர்வாழ்வுக் கழகம் பிரான்ஸ்

மாவீரர்கள்