Sanskathi
Jun 13

அன்னையின் அரவணைப்பு

ஓர் அன்னையின் அரவணைப்பு க்கு நிகர் ஏது?. அந்த அன்னையே ஒரு ஆன்மீக ஆற்றல் வாய்ந்த மகானாக,ஞானமடைந்தசற்குரு வாக இருந்தால் அதற்கு நிகர் ஏது? அதுவும் நம்மை தேடி வந்தால்?  

கலியுகத்தில் குருமார் சீடரை தேடி வருவார்கள் என்ற வாக்கிற்கு அமைய பலர் மேல் நாடுகளிற்கு வருகை தந்து இருக்கிறார்கள்

அந்த வகையில் தற்போது அம்மா என்று அழைக்கப்படும் மாதா அமிர்தானந்தமயி அவர்கள் ரெறன்ரோவிற்கு 31 வது ஆண்டாக வருகை தர இருக்கின்றார்

கேரளாவில் ஒரு சிறிய மீனவர் கிராமத்தில் அவதரித்து இன்று உலகம் முழுவதும் 33 மில்லியன் மக்களிற்கு மேலாக தன் அரவணைப்பு மூலமாக அருள்பாலிக்கும் அன்னையின் தரிசனம் பெற்று ஆன்மீக அதிர்வுகளை அனுபவியுங்கள், ஓர் சற்குரு வின்  சான்நித்யத்தில்

தியானம் செய்யும் மகாஅனுபவத்தை பருகுங்கள்

ஒரு மகான் வாழும் சமகாலத்தில் வாழ்வதே பெரும் பேறு.அவர் பரிசம் பெற்று ஆசி வாங்குவது என்பது கிடைத்தற்கரியது.

இடம்-Delta hotel, 655, Dixon road, Toronto,m9w1j3

காலம்- 8 July காலை 10 மணி  , மற்றும் மாலை 7.30 மணி

11 July மாலை 7.30 மணி, அன்று விரும்பினால் மந்திர தீட்சை பெற முடியும். பிரவேசம் இலவசம்.

மாவீரர்கள்