இன்று

சங்கதியை உங்களுக்கு பிடித்தமாதிரி மாற்றியமைக்க.
இங்கே தெரிவுசெய்க:

சாதாரணம் | வாகை | கார்த்திகைப்பூ | சிறுத்தை | செம்பகம்

பிரதான செய்திகள் ஏனைய செய்திகள்

முகப்பு / செய்திகள் / பிரதான செய்தி

பிரதான செய்தி
04.07.2008 / நிருபர் வானதி
மன்னாரில் நேற்று இலங்கை இராணுவத்தினரின் முன்நகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் 15 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 30-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். படையினரின் உடலங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. // விரிவாக
03.07.2008 / நிருபர் எல்லாளன்
கரும்புலி நாளை முன்னிட்டு கரும்புலிகளின் திருவுருவப்படங்களடங்கிய சிறப்புப்பந்தல் இன்று கிளிநொச்சியில் திறந்து வைக்கப்பட்டது. // விரிவாக
03.07.2008 / நிருபர் வானதி
சிறிலங்காவின் உயர் இராணுவ அதிகாரிகளினால் முன்னெடுக்கப்படும் திட்டமிடப்படாத, முறையற்ற போரியல் நடவடிக்கையினால் ஐம்பது ஆயிரம் படையினருக்கு வன்னி மண்ணில் சமாதி கட்டும் காலம் நெருங்கிவிட்டதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட // விரிவாக
02.07.2008 / நிருபர் எல்லாளன்
சிறிலங்காவில் அண்மைக்காலமாக பொதுமக்களின் உயிரிழப்புக்கள் அதிகரித்திருப்பதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது. கடந்த மூன்று மாதங்களில் பொதுமக்களை இலக்குவைக்கும் தாக்குதல்கள் அதிகரித்திருப்பதாகவும், இதுவரை பொதுமக்கள் 80 பேர் கொல்லப்பட்டிருப்பதாகவும் ச.செ.சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. // விரிவாக
01.07.2008 / நிருபர் எல்லாளன்
அம்பாறை மாவட்டம் அறுகம்பை பாலத்தை திறந்து வைப்பதற்காக சென்றுவிட்டு கொழும்பு திரும்பிக்கொண்டிருந்த சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச பயணம் செய்த உலங்குவானூர்தி மீது தமிழீழ விடுதலைப் புலிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதில் உலங்குவானூர்தி சேதமடைந்துள்ள போதும் மகிந்த ராஜபக்ச நூலிழையில் உயிர்தப்பியுள்ளார். // விரிவாக
01.07.2008 / நிருபர் எல்லாளன்
சிங்களப் பேரினவாத அரசாங்கத்துக்கு தமிழினம் விரைவில் தகுந்த பதிலடி கொடுக்கும் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் துணைத்தளபதி அமுதாப் தெரிவித்துள்ளார். // விரிவாக
30.06.2008 / நிருபர் எல்லாளன்
தமிழீழ தேசியத் தலைவர் அவர்களின் திட்டத்தினை உரிய நேரத்தில் சிறிலங்காப் படையினர் கற்றுக்கொள்வார்கள் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் மன்னார் மாவட்ட கட்டளைத் தளபதி கேணல் லக்ஸ்மன் தெரிவித்துள்ளார். // விரிவாக
29.06.2008 / நிருபர் எல்லாளன்
சிங்கள அரசாங்கத்தினால் தமிழ் மக்களுக்கு எதிராக தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டுவரும் இனஅழிப்பு நடவடிக்கைகளை தடுத்து நிறுத்துவதற்கு சர்வதேச சமூகம் விரைவான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். // விரிவாக
28.06.2008 / நிருபர் எல்லாளன்
வடபோர்முனையில் இரு சமர்களின் போது சிறப்பாகச் செயற்பட்ட போராளிகளுக்கான சான்றிதழ் வழங்கி மதிப்பளிக்கும் நிகழ்வு வடபோர்முனைக்கு அருகாமையில் ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில் நேற்று இடம்பெற்றது. // விரிவாக
27.06.2008 / நிருபர் எல்லாளன்
பொங்கு தமிழ் நிகழ்வுகளின் ஊடாக தமிழ் மக்களின் பலத்தை புலம்பெயர் தமிழர்கள் வெளிப்படுத்தி வருகின்றனர் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் பாராட்டுத் தெரிவித்துள்ளார். // விரிவாக
26.06.2008 / நிருபர் எல்லாளன்
எதிரியைவிடவும் எமது தாக்குப்பிடிக்கும் திறண் அதிகரிக்கும் போதே வெற்றி நிச்சயமாகும் என விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினர் க.வே.பாலகுமாரன் தெரிவித்துள்ளார். நேற்று கிளிநொச்சியில் நடைபெற்ற 'சாளரம்' கணனி சார் // விரிவாக
25.06.2008 / நிருபர் எல்லாளன்
சிறீலங்கா படையினரால் கடத்திச் செல்லப்படலாம் என்ற அச்சம் காரணமாக தம்மை தமது பெற்றோர் தமிழ்நாட்டிற்கு அனுப்பி வைத்திருப்பதாக, 11 அகவையுடைய சிறுமி ஒருவர் பி.பி.சி தொலைக்காட்சிக்கு தெரிவித்துள்ளார். // விரிவாக
24.06.2008 / நிருபர் எல்லாளன்
பெல்ஜியத்தில் நேற்று திங்கள் (23.06.2008) அன்று புறூசலில் உள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் முன்பாக பெல்ஜியத் தமிழர்களால் பொங்குதமிழ் எழுச்சிநிகழ்வு நடாத்தப்பட்டது. // விரிவாக
23.06.2008 / நிருபர் எல்லாளன்
நெதர்லாந்து நாடாளுமன்றமுன்றலில் நேற்று ஆயிரத்திற்கும் மேற்பட்ட புலம்பெயர்வாழ் தமிழ்மக்கள் கலந்துகொண்ட பொங்குதமிழ் நிகழ்வு மிகவும் எழுச்சியுடன் நடைபெற்றது. பொங்குதமிழ் மேடையில் தமிழீழத்தேசியத்தலைவரின் முழுஉருவப்படம் பெரியளவில் வைக்கப்பட்டிருந்தது. நாடாளுமன்ற முன்றல் சிகப்பு மஞ்சள் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
// விரிவாக
21.06.2008 / நிருபர் எல்லாளன்
உலகத் தமிழர் இயக்கம் கனேடிய அரசினால் பயங்கரவாதப் பட்டியலில் சேர்க்கப்பட்டது தொடர்பான செய்தியாளர் மாநாடு யூன் 19 வியாழக்கிழமை நண்பகல் 1.00 மணிக்கு கீழ்நகர் புறம் இல. 11 பிரின்ஸ் ஆர்தர் அவெனியூவில் உள்ள வழக்கறிஞர்கள் Ruby and Marlys Edwardh அலுவலக நூலகத்தில் நடைபெற்றது. // விரிவாக
21.06.2008 / நிருபர் எல்லாளன்
இலங்கையில் இடம்பெறும் மோதல்களால் 20ஆம் நூற்றாண்டின் இரண்டாவது அரைநூற்றாண்டு பகுதியில் உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 3.6 மடங்காக அதிகரித்திருப்பதாக பிரித்தானிய ஆய்வொன்றில் கண்டறியப்பட்டுள்ளது // விரிவாக
20.06.2008 / நிருபர் எல்லாளன்
மன்னார் பெரியமடுவிலிருந்து சிராட்டிகுளம் பெருமெடுப்பில் மேற்கொண்ட சிறிலங்காப் படையினரின் முற்னேற்ற முயற்சி விடுதலைப்புலிகளால் முறியடிக்கப்பட்டது. இத் தாக்குதலில் பலத்த உயிர் இழப்புக்களுடன் படையினர் பின்வாங்கினர். // விரிவாக
18.06.2008 / நிருபர் எல்லாளன்
மன்னார் பொது விளையாட்டு மைதானத்திற்கு அருகாமையில் உள்ள காவலரண் மீது இன்று அதிகாலை 2.05 மணியளவில் கைக்குண்டு தாக்குதல் மற்று துப்பாக்கிப் பிரயோகமும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தொடர்ந்து 45 நிமிடங்கள் வரை தொடர்ச்சியான துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. // விரிவாக
17.06.2008 / நிருபர் எல்லாளன்
சிறீலங்கா அரசின் கோரிக்கைக்கு இணங்க ஆயுதங்களைக் கைவிட முடியாது என, றொயிற்றர்ஸ் (Reuters) செய்தி சேவைக்கு மின்னஞ்சல் ஊடாக வழங்கிய செவ்வியில், விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் அவர்கள் கூறியுள்ளார். // விரிவாக
17.06.2008 / நிருபர் எல்லாளன்
இலங்கைத் தமிழர்களுக்காக போராட 10 ஆயிரம் சான்றோர்களை ஒருங்கிணைத்து அரசியலுக்கு அப்பாற்பட்ட நிகழ்ச்சியொன்றை விரைவில் நடத்தவுள்ளதாக பாட்டாளி மக்கள் கட்சித்தலைவர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். // விரிவாக
16.06.2008 / நிருபர் எல்லாளன்
வவுனியா நகரில் சிறிலங்கா பொலிஸ் அத்தியட்சகரின் அலுவலகத்திற்கு முன்பாக இன்று காலை 7.10 மணியளவில் குண்டுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் 12 பொலிசார் சம்பவ இடத்திலே கொல்லப்பட்டதோடு 40 பேர் படுகாயமடைந்துள்ளனர். // விரிவாக
15.06.2008 / நிருபர் எல்லாளன்
எட்டுக் கோடித் தமிழர்களும் குரல்கொடுத்தால், தமிழீழத்தை உலகம் அங்கீகரிக்கும் என, தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
// விரிவாக
14.06.2008 / நிருபர் எல்லாளன்
நேர்வே ஓஸ்லோ, பேர்கன், துர்னெயம், ஸ்ரவங்கர், மொல்ட்டே, ஓலசூண்ட், புலூரா போன்ற நகரங்களில் பொங்குதமிழ் எழுச்சி நிகழ்வு உணர்வெழுச்சியுடன் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் மூவாயிரத்திற்கும் அதிகமான மக்கள் பங்கேற்று தமது உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளனர். // விரிவாக
14.06.2008 / நிருபர் எல்லாளன்
புலம் பெயர்ந்த தமிழ் மக்கள் பெருமளவில் பொங்குதமிழ் எழுச்சி நிகழ்வில் கலந்துகொள்ள வேண்டும் என, தமிழின உணர்வாளரும், இயக்குனருமான சீமான் அழைப்பு விடுத்துள்ளார்.

// விரிவாக
13.06.2008 / நிருபர் எல்லாளன்
ஹகவத்த இரத்தனபுர பகுதியில் இன்று கைக்குண்டுத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது. அத் தாக்குதலில் 06 பேர் படுகாயமடைந்துள்ளனர் படுகாயமடைந்தவர்கள் இரத்தினபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். // விரிவாக
13.06.2008 / நிருபர் வானதி
தமிழீழ தேசியத் தலைவரின் தலைமையில், தமிழினம் விடுதலை பெறும் காலம் நெருங்கி வருவதாக, பா.நடேசன் தெரிவித்துள்ளார்.
விடுதலைப் போராட்டத்திற்கு, அவ்வப்பொழுது சோதனைகள் -
சவால்கள் ஏற்படும் வேளைகளில், மக்கள் அணிதிரண்டு விடுதலைப்
போராட்டத்தை வெற்றிப் பாதையூடாக // விரிவாக
12.06.2008 / நிருபர் எல்லாளன்
சிறீலங்கா சமாதான முயற்சியின் அனுசரணையாளர்களான நோர்வே தூதுவர்களை, வன்னி செல்ல அனுமதிக்க முடியாது என, சிறீலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது. // விரிவாக
12.06.2008 / நிருபர் எல்லாளன்
வவுனியா குஞ்சுக்குளம் பகுதியில் சிறிலங்காப் படையினர் பல்குழல் மற்றும் ஆட்லெறி எறிகணைச் சூட்டாதரவுடன் விடுதலைப்புலிகளின் நிலைகளை நோக்கி முன்நகர்வு முயற்சியை மேற்கொண்டனர். // விரிவாக
11.06.2008 / நிருபர் எல்லாளன்
மன்னார் எருக்கலப்பிட்டியில் அமைந்துள்ள சிறிலங்கா கடற்படையினரின் கடற்படைத் தளம் இன்று அதிகாலை 2.08 மணியளவில் கடற்புலிகளின் சிறப்பு அணியினரால் தாக்கி அழிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்கிய அழிப்பு நடவடிக்கையின்போது சிறிலங்கா கடற்படையினர் 10 பேர் கொல்லப்பட்டனர். பெருமளவானோர் காயமடைந்துள்ளதுடன் கடற்புலிகளால் ஆயுதங்களும் மீட்க்கப்பட்டுள்ளது. // விரிவாக
10.06.2008 / நிருபர் எல்லாளன்
மன்னாரில் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட பெருமெடுப்பிலான முன்நகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் 20 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 40 பேர் காயமடைந்துள்ளனர் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார் // விரிவாக

ஏனையவை

இன்றைய நாள்
1996

2ம் லெப்
வள்ளுவன்
நினைவுநாள்.

1995

லெப்
செங்கதிர்
நினைவுநாள்.

1996

யாழ்ப்பாணத்தில்
இடம்பெற்ற
குண்டுவெடிப்பில்
மேஜர் தர
அதிகாரி உட்பட
12 படையினர் பலியாகினர்.

1776

ஐக்கிய
அமெரிக்கா
விடுதலை
அடைந்தநாள்.


கார்திகை புக்கள்
கார்த்திகைப் பூக்கள்

இந்நாளில் நினைவு கூரும், வீரம் விளைந்த மண்ணின் விடுதலை வித்துக்கள்.


விளம்பரம்