Breaking News
விஜய் சேதுபதியுடன் படப்பிடிப்பை முடித்த ஈழத்து ஜனனி
.

விஜய் சேதுபதியுடன் படப்பிடிப்பை முடித்த ஈழத்து ஜனனி
நடிகை ஜனனி விஜய் சேதுபதி நடிக்கும் ட்ரெயின் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் நிறைவு விழா புகைப்படங்கள் வெளியாகி இணையத்தினை ஆக்கிரமித்து வருகின்றது. இலங்கையில் யாழ்ப்பாணத்தினை சேர்ந்த நடிகை ஜனனி பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழின் உச்சத்தினை அடைந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு நடிகர் விஜய் நடித்த லியோ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து சினிமா பயணத்தை ஆரம்பித்திருந்தார். தற்போது நடிகர் விஜய் சேதுபதியின் ட்ரெயின் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து முடித்துள்ளார். இது குறித்த புகை்பபடங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.