Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

யாழில் இளைஞர்களை குறி வைத்து புலம்பெயர்ந்தோர் நடத்தும் பண மோசடி

.

 

வெளிநாடுகளில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு வருகை தருவோரால், வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாகக் கூறி கிராமப் புற இளைஞர்கள் ஏமாற்றப்பட்டு வருவதாக யாழ். மாவட்ட மூத்த பொலிஸ் அத்தியட்சகர் ஜெகத் நிஷாந்த தெரிவித்துள்ளார்.

இவ்வாறு ஏமாற்றப்படும் இளைஞர்களிடம் இருந்து 30 தொடக்கம் 40 இலட்சம் ரூபா வரையில் பணமோசடி இடம்பெறுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அவர்களின் ஏமாற்று நாடகத்தை அறியாத அப்பாவி இளைஞர்கள் போலி வாக்குறுதிகளை நம்பி பணத்தை இழக்கின்றனர். இது தொடர்பான ஏராளமான முறைப்பாடுகள் யாழ்ப்பாணம் மற்றும் சாவகச்சேரி பொலிஸ் நிலையங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

எனவே, இவ்வாறான மோசடிகள் தொடர்பில் அவதானமாகவும் விழிப்பாகவும் இருப்பது அவசியம் என ஜெகத் நிஷாந்த மேலும் கூறியுள்ளார்.

அத்துடன், அண்மைக்காலமாக இவ்வாறான மோசடிகள் அதிகரித்து வருவதாகவும் வெளிநாடுகளில் இருந்து வருவோரே இத்தகைய மோசடியில் அதிகம் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.